திரிஷா பிறந்தநாள் கொண்டாட்டத்தை பாருங்க.. யப்பா எவ்வளவு மகிழ்ச்சி, பூரிப்பு முகத்தில்
சென்னை: கோலிவுட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் திரிஷா. அவர் இப்போதும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக கருப்பு படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. அடுத்ததாக விஸ்வம்பரா உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா குறுகிய காலத்திலேயே டாப் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். ர்ஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, ரவி மோகன், தனுஷ், கார்த்தி, ஆர்யா என கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

இன்னமும் டாப்தான்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவரது கிராஃப் இடையில் சில வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் தடுமாற்றத்தை சந்தித்தது. அதனால் அவரது கரியர் காலி என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் 96 திரைப்படம் அவருக்கு தரமான கம்பேக்காக அமைந்தது. அப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் கோலிவுட்டில் டாப் நடிகை என்ற இடத்துக்கு வந்துவிட்டார் அவர்.
குறையான மவுசு: அப்படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷாவின் காட்டில் மழைதான். பொன்னியின் செல்வன், விடாமுயற்சி, குட் பேட் அக்லி, லியோ, தக் லைஃப் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இவற்றில் அத்தனை படங்களுமே பெரிய ஹிட் இல்லையென்றாலும் திரிஷாவின் திறமையும், அவரது அழகும் வேறு பரிணாமத்தில் இருந்தன. அடுத்ததாக சூர்யாவுடன் கருப்பு படத்தில் ஜோடி சேர்ந்தார். சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது.
திரிஷா பிறந்தநாள்: இதற்கிடையே திரிஷாவின் பிறந்தநாள் கடந்த மே நான்காம் தேதி வந்தது. அன்றைய தினம்தான் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவும் வந்தது. தேர்தலில் திரிஷாவுக்கு நெருங்கிய நண்பர் வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராகவும் பதவியேற்றார். யாருமே இப்படி ஒரு பிறந்தநாள் பரிசை திரிஷாவுக்கு கொடுத்திருக்க முடியாது என கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரிஷாவின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
திரிஷா வீடியோ: அதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் தன் தோழியுடன் சேர்ந்து கேக் வெட்டிய வீடியோதான் திடீரென ட்ரெண்டாகியுள்ளது. பெரிய கேக்கை க்யூட்டாக வெட்டும் வீடியோவை பார்த்த ரசிகர்கள், தன்னை சுற்றி எவ்வளவு நெகட்டிவிட்டி பரவினாலும் அதனை திரிஷா கண்டுகொள்வதே இல்லை; வாழ்க்கை முழுவதும் அவர் இப்படியே இருக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
