ஆடையை கொஞ்சம்.. மாலை நேரத்து மயக்கம் பட நடிகையின் மோசமான செயல்.. நச்சரிக்கும் ரசிகர்கள்
சென்னை: பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் வாமிகா கப்பி.
தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த வாமிகா, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை வாமிகா கப்பி பத்திரிகையாளர்கள் முன்பு நடிகருடன் சேர்ந்து அவர் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது, இதற்கு கண்டனங்களும் எழுந்துள்ளன.
மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் வாமிகா கப்பி. இதற்கு முன்பு மலையாளத்தில் கோதா படத்தில் நடித்திருந்தார். பின்னர் பாலிவுட்டிற்கு சென்ற அவர் கொரோனா காலத்தில் இளைஞர்களை கவர்ந்த சென்சேஷனல் ஹீரோயின் இவர்தான். இவர் நடித்த முந்தைய படங்களின் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டன. சமூகவலைதளங்களில் இவரது கிளாமரான புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ், இந்தி தெலுங் படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும், இவர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான குஃபியா வெப் தொடரில் இவரது நடிப்பு பாராட்டை பெற்றது.

இந்த தொடரில் உளவாளி ஒருவரின் மனைவியாகவும், அவருக்கு பிடித்த இடத்தில் நடனம் என கலக்கியிருப்பார். வீட்டில் இருக்கும் குடும்ப பெண் தனது வேலைகளையெல்லாம் முடித்து விட்டு பிடித்த பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பரவசமடைந்தனர். அதனைத்தொடர்ந்து ஒரு தொடரில் லிப் லாக் காட்சிகளும் இடம்பெற்றன. பின்னர் சென்னை மாடர்ன் லவ் வெப் சீரிஸில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை படத்தில் நடித்தார். நினைவோ ஒரு பறவையில் வாமிகாவை யாரும் மறக்க முடியாது. நிதானமான பேச்சுக்களாலும் காதல் நிறைந்த காட்சிகளால் அழகுப்படுத்தியிருப்பார். நினைவோ ஒரு பறவை தொடரில் வாமிகா பார்வையாளர்களை கவர்ந்து ஈர்த்திருப்பார். ஒரு தனித்துவமான கதையை இவர் ஒருவரே தாங்கி பிடித்திருப்பார். இன்றைக்கும் ரசிகர்கள் ஃபேவரட் தொடராக நினைவோ ஒரு பறவை இருக்கிறது.
இவர் இந்தி பஞ்சாபி மொழி படங்களில் அதிகம் நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ஜூப்ளி இணையத் தொடரில் அற்புதமாக நடித்திருந்தார். மேலும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான சார்லி சோப்ரா எனும் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான பேபி ஜான் படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தமிழில் வெளியான தெறி படத்தின் ரீமேக் தான் பேபி ஜான். ஆனால், அப்படம் ஒரு வாரத்திலேயே டல்லடிக்க தொடங்கிவிட்டது.

BHOOL Chuk Maf என்ற இந்தி படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் விழாவில் பங்கேற்ற வாமிகா கப்பி கண்களை ஆட்டிக்கொண்டு குறும்புத்தனங்களை செய்தார். அப்போது, அவர் அணிந்த ஆடையை கொஞ்சம் தூக்கி காமித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அவர் விளையாட்டாக செய்தார் என நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்தாலும். சிலர் பொது இடத்தில் இப்படியா நடந்துகொள்வது என விமர்சிக்க தொடங்கி விட்டனர். அந்த வீடியோவில் அருவருக்கத்தக்கும் வகையில் என விளக்கம் அளித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு நடிகர் முன்பு இப்படியா நடந்துகொள்வது என கிசுகிசுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











