கும்பமேளா மோனாலிசா கணவருக்கு ரத்தம் வரும் அளவுக்கு தர்ம அடியா? வீடியோவைப் பாருங்க!

மும்பை: நடிகை மேனாலிசா அண்மையில் தனது காதலரை கேரளாவில் ஒரு காவல்நிலையத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், ரசிகர்கள் பலரும் வாழுத்து தெரிவித்தனர். இந்நிலையில் கும்பமேளா மோனாலிசாவின் காதல் கணவர் முகமது ஃபர்ஹான் முகத்தில் ரத்தம் வழிந்து சாலையின் ஓரத்தில் அவர் நடந்து செல்வதைப் போன்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. என்ன ஆனது என்று பார்க்கலாம்.

முதலில் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவைப் பார்த்து யாரும் பயப்படத் தேவையில்லை. காரணம் அது ஒரு ஆல்பம் பாடலின் வீடியோ. இதை மோனாலிசா போஸ்லேவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்துள்ளார். மோனாலிசா போஸ்லே மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் 2024ஆம் ஆண்டு உத்தரபிரதேச பிரயாக்ராஜ் பகுதியில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியில் ருத்ராட்ச மாலைகள் விற்றுக் கொண்டு இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

இதனால் இணையவாசிகள் பலரும் அவரது அழகைப் புகழ்ந்து தள்ள, அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. வட இந்திய சினிமாக்களில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாக்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். கடந்த மாதத்தில் தனது காதலரான முகமது ஃபர்மானைக் கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொண்டார்.

Viral Video Shock Monalisa s Husband Seen Injured Here s the Truth Behind the Clip

அவரது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தனர். பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது மட்டும் இல்லாமல், இந்தியாவில் சாதி மறுப்பு மற்றும் மத மறுப்பு திருமணம் செய்வது என்பது, வட இந்திய மாநிலங்களில் அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.

அட்ஜெஸ்மெண்ட்: இவரது திருமணத்திற்கு பின்னர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னை தனது முதல் படத்தின் இயக்குநர் படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். எனது உடல் பாகங்களை எல்லாம் தொட்டார். அப்போது எனது பெற்றோர்களும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தனர். சினிமாவில் முதன் முதலாக நடிக்க வந்தால், அந்த பெண்களை மிகவும் மோசமாக நடத்துவீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

வீடியோ: இந்நிலையில் கும்பமேளா மோனாலிசாவின் காதல் கணவர் முகமது ஃபர்ஹான் முகத்தில் ரத்தம் வழிந்து சாலையின் ஓரத்தில் அவர் நடந்து செல்வதைப் போன்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. காரணம் அது ஒரு ஆல்பம் பாடலின் வீடியோ. இதை மோனாலிசா போஸ்லேவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீ போஸ்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X