கோஹ்லியுடன் திருமணமா?: இல்லவே இல்லை என்கிறார் நடிகை அனுஷ்கா
மும்பை: கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. நள்ளிரவில் அவர்கள் ஜோடியாக சுற்றியது குறித்து செய்திகள் வந்தன.
இதை எல்லாம் வைத்து அவர்கள் காதலிப்பதாகக் கூறப்பட்டது.

இங்கிலாந்து
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது கோஹ்லியுடன் அனுஷ்கா தங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது.

ஏன்?
அனுஷ்கா எதற்காக கோஹ்லியுடன் தங்குகிறார் என்று அணி நிர்வாகத்தினர் கேட்டதற்கு அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

அனுஷ்கா
கோஹ்லியுடன் நேரம் காலம் பார்க்காமல் சுற்றியதால், இங்கிலாந்தில் ஒன்றாக இருந்ததால் அவரை அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டது.

திருமணம்
கோஹ்லியை அனுஷ்கா திருமணம் செய்து கொள்வதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்று நடிகையின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஒரு வேளை நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்பாரோ அனுஷ்கா.


Click it and Unblock the Notifications











