ViRosh Wedding: ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்ததா? கல்யாணி பிரியதர்ஷன் பகிர்ந்த ரகசிய புகைப்படம்
உதய்ப்பூர்: நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் அவர்கள் திட்டமிட்டது படி பிப்ரவரி 26ஆம் தேதி செம கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திருமணம் உதய்ப்பூரில் உள்ள ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படி இருக்கையில் இவர்களின் திருமணக் கொண்டாட்டம் கடந்த இரண்டு நாட்களாகவே நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அவர்களின் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான தனது புகைப்படத்தை அவர் பகிர்ந்தும் உள்ளார்.
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் குறித்து பலரும் பல விதமான கேள்விகள் கேட்டு வந்தாலும், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சாமர்த்தியமான பதில்களால் தொடர்ந்து நழுவிக் கொண்டே இருந்தார். ஆனால் எந்த இடத்திலும் மறுக்கவில்லை. இப்படி இருக்கையில் அவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்றும் பேச்சுக்கள் எழுந்தது.

அந்த வகையில் இருவருக்கும் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. டோலிவுட் தொடங்கி அனைத்து தென்னிந்திய சினிமாவில் இருந்து குறிப்பிட்ட சில நட்சத்திரங்களும், பாலிவுட்டில் இருந்து குறிப்பிட்ட சில நட்சத்திரங்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான அம்பானி குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நட்சத்திரங்களும் வி.ஐ.பிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னரே சென்றுவிட்டனர்.
ஹல்தி கொண்டாட்டம்: இப்படி இருக்கையில் அவர்கள் திருமணத்தில் மற்ற திருமணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சில கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. குறிப்பாக ViRosh பிரீமியர் லீக் என்ற கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. மேலும் நீச்சல் குளத்தில் வாலிபால் போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இவர்களின் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன்: அதில் அவர் ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹல்தி கொண்டாட்டம் முடித்த பின்னர் தனது முகத்தில் பச்சை நிற பொடி பூசப்பட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதற்கு எனக்கு பிடித்த காதலை நேற்று இரவு கொண்டாடிய போது என்று கேப்ஷனும் இட்டுள்ளார். அவரது இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ஆகியோரது திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளாரே என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் கல்யாணி பிரியதர்ஷன் அறையில் இருக்கும் படியாக எடுக்கப்பட்ட செல்ஃபி என்பதால், இவர் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் என்று எல்லாம் சிலர் டீ கோட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











