ViRosh Wedding: அதற்கு மட்டும் சான்ஸே இல்லை! திருமணச் செலவு விஷயத்தில் கறார் காட்டிய ராஷ்மிகா மந்தனா?
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா என இருவரது திருமணமும் பிப்ரவரி 26 ஆம் தேதியும் வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 4 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதில் திருமணம் உதய்ப்பூர் அரண்மனையிலும் வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலிலும் நடைபெறவுள்ளது. இப்படி இருக்கையில் இவர்கள் திருமணம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது திருமண செலவு குறித்த தகவல்களும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது.
இவர்களின் திருமணம் உதய்ப்பூரில் நடைபெறுவதால் அங்கு மொத்தம் மூன்று நாட்களுக்கு மேல் திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதற்கான அவர்கள் ஐடிசி மொமண்ட்ஸ் என்ற ஹோட்டலை புக் செய்துள்ளார்கள். இவர்கள் அங்கு தங்கும் மூன்று நாட்களுக்கும் அந்த ஹோட்டலில் உள்ள மொத்த அறைகளான 117 அறைகளையும் வாடகைக்கு எடுத்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஸ்பெஷான கவனிப்புகளும் செய்யப்படுகிறதாம்.
இதற்காக மட்டும் ஒரு நாளைக்கு சுமார் ஒரு கோடி முதல் 2.5 கோடிகள் வரை செலவு செய்யப்படுகிறதாம். இது இல்லாமல் திருமணச் செலவு, வரவேற்பு நிகழ்ச்சிக்கான செலவு என திருமணத்திற்கு மட்டும் சுமார் 15 முதல் 18 கோடிகள் வரை செலவு செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம்.

திருமண செலவு: இப்படி இருக்கையில் திருமணச் செலவை முதலில் விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் நாங்களே எல்லா செலவையும் பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் ராஷ்மிகா தரப்பிலோ, அதெல்லாம் முடியாது. திருமணச் செலவு எத்தனை கோடிகள் ஆனாலும் சரி அதில் இருவருக்கும் சரி பாதி என்று மிகவும் கறாராக தெரிவித்து விட்டார்களாம். குறிப்பாக ராஷ்மிகாவோ, நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்கிறோம்.
ராஷ்மிகாவின் முடிவு: அப்படி இருக்கும்போது நான் வாழ வரும் வீடு அது, அது மட்டும் இல்லாமல் இது எங்களின் திருமணம். அப்படி இருக்கும்போது நாங்கள் இருவரும் இணைந்தே செலவு செய்து எங்கள் திருமணத்தை நடத்துவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் எடுத்துக் கூறிய பின்னர் தான் விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினர் சரி என்று கூறினார்கள் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











