Virumandi Abhirami: எனக்கு விஜயுடன் நடிக்க ஆசை..ஏன் தெரியுமா? விருமாண்டி அபிராமி பேட்டி!
சென்னை: நடிகை அபிராமி என்று சொல்வதை விட விருமாண்டி அபிராமி என்று சொன்னவுடன் மக்கள் மனதில் டக்குனு வந்துவிடுவார் அபிராமி. ஏன், என்றால், அந்த படத்தில் ஒரு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலான இவர், விஜய்யுடன் நடிக்க ஆசையாக இருப்பதாகவும், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன்பின் வாணவில்,தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவருக்கு விரும்பாண்டி படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து,ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

அபிராமி பேட்டி: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அபிராமி, அதில், நானும் என்னுடைய கணவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். அதன்பின் வளர்ந்ததும் இருவரும் வேலையை பார்க்க கிளம்பிவிட்டோம். வேலை நிமிர்த்தமாக அமெரிக்கா சென்ற போது மீண்டும் எங்கள் நட்பு வளர்ந்து அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
மகளின் பெயர் கல்கி: கடந்த ஆண்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறோம். சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதைத்தான் செய்தேன். அவளுக்கு கல்கி என்று பெயர் வைத்து இருக்கிறேன். ஏன் என்றால் கல்கி என்பது ஒரு அவதாரம், அதை நான் பெண்ணாக பார்க்கிறேன். பெண்ணால் தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய இவர், எனக்கு நடிகர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஏன் என்றால், என் கணவர் ராகுல் விஜய் போலவே இருப்பார். அவரை ஹீரோவாக்க முடியாது என்பதால், விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இந்த பேட்டியைப்பார்த்த விஜய் பேன்ஸ், அவரே அரசியலுக்கு வந்து விட்டார். இனிமேல் வாய்ப்பு இல்ல மேடம் என்று கூறி வருகின்றனர்.
ஆர் யூ ஓகே பேபி: அண்மையில் இவர், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஆர் யூ ஓகே பேபி படத்தில் நடித்திருந்தார். திருமணம் செய்யாமலே ஒரு பெண் குழந்தை பெற்று எடுக்கிறாள்.அந்த குழந்தையை,குழந்தை பாக்கியம் இல்லாத பாலச்சந்திரன் சமுத்திரக்கனி, அபிராமி தம்பதியர், அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து அவர் குழந்தையைத் தத்தெடுக்கிறார்கள். பாலனும் வித்யாவும் குழந்தையை அன்புடன் வளர்க்கிறார்கள்.
காதலனால் கைவிடப்படும் பெண், தான் பெற்ற குழந்தையை மீட்க, தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் சொல்லாததும் உண்மை நிகழ்ச்சி வருகிறாள். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ராஷ்மி ராமகிருஷ்ணன் திருமணம் செய்யாமல் குழந்தைப் பெற்று, பணத்துக்காக அதை விற்ற பெண்ணுக்கு உதவ மறுக்கிறார். இதனால் சட்டப்போராட்டத்தில் இறங்குகிறார் அந்த பெண். அதில் அவருக்கு வெற்றிக் கிடைத்ததா? என்பது தான் படத்தின் கதை. இதில், அபிராமி வித்யாவாக அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.


Click it and Unblock the Notifications











