லட்டு நடிகைக்கு ஒரே ஆண்டில் 2 முறை திருமணம்

By Siva

சென்னை: ஒரே ஆண்டில் 2 முறை திருமணம் செய்து கொள்வதாக நடிகை விசாகா சிங் தெரிவித்துள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் கோலிவுட்டில் பிரபலம் ஆனார் விசாகா சிங். பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் உள்ளார். அவர் தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அவர் தமிழில் வாலிப ராஜா படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் லட்டு கூட்டணி

மீண்டும் லட்டு கூட்டணி

வாலிப ராஜா படத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சந்தானம், சேது, விசாகா சிங், விடிவி கணேஷ், தேவதர்ஷினி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

திருமணம்

திருமணம்

வாலிப ராஜா படத்தில் விசாகா சிங்கிற்கு திருமணம் நடக்கும் காட்சி உள்ளது. இந்த காட்சிக்காக விசாகா சிங்கை பட்டுப்புடவையில் மணமகள் கோலத்தில் அலங்கரித்துள்ளனர்.

2வது முறை திருமணம்

2வது முறை திருமணம்

ஒரே ஆண்டில் 2வது முறையாக எனக்கு திருமணம். படத்திற்காகத் தான். முதலில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு, தற்போது வாலிப ராஜாவுக்கு என்று விசாகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பூ தான்

பூ தான்

திருமண காட்சிக்காக அலங்கரித்துக் கொள்வது மிகவும் பிடித்துள்ளது. ஆனால் தலையில் உள்ள பூக்களின் கனம் தான் சற்று கடினமாக உள்ளது என்று விசாகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X