அடடா… விஷாகா சிங் விலா எலும்பு முறிஞ்சி போச்சாமே?

By Mayura Akilan

சென்னை: உதவி இயக்குநர் ஒருவர் நடுரோட்டில் வேகமாக விசாகா சிங்கை தள்ளிவிட்டதால் அவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாம்.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோயின் விசாகா சிங் இவர் தெலுங்கில் 'ரவுடி ஃபெலோ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நாரா ரோஹித் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் பீமாவரம் பகுதியில் ஒரு சாலையில் நடந்தது.

தள்ளிவிட்ட உதவி இயக்குநர்

தள்ளிவிட்ட உதவி இயக்குநர்

கடைசி நாள் ஷூட்டிங்கில் விசாகா சிங்கை உதவி இயக்குனர் ஒருவர் நடுரோட்டில் வேகமாக தள்ளிவிட்டதால் அவர் காயமடைந்தார். இதில் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது.

டேக் சொன்ன உடனே

டேக் சொன்ன உடனே

ஒத்திகையின்போது சுழன்றபடி ஓடும் காட்சியில் நன்றாக நடித்தேன். டேக் எடுப்பதற்காக இயக்குனர் ஆக்ஷன் சொன்னார். நான் சுழன்றபடி ஓட தயாரானபோது அருகில் இருந்த உதவி இயக்குனர் என்னை வேகமாக தள்ளிவிட்டார் என்று விஷாகா சிங் கூறினார்.

தடுமாறி விழுந்தேன்

தடுமாறி விழுந்தேன்

உதவி இயக்குநர் தள்ளியதில் நான் பேலன்ஸ் தவறி ரோட்டில் விழுந்தேன். வலி தாங்க முடியாமல் கதறினேன். அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் ஓடிவந்து என்னை மீட்டனர். வலியால் துடித்த என்னை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள்.

4 வாரம் ரெஸ்ட்

4 வாரம் ரெஸ்ட்

என்னை பரிசோதித்த டாக்டர் விலாவில் முறிவு ஏற்பட்டது பற்றி சொன்னபோது ஷாக் ஆனேன். 2 வாரத்துக்கு படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும். காயம் ஆற 4 வாரங்கள் ஆகும் என்று டாக்டர் கூறியபோது கண்கலங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார் விஷாகா.

லண்டன் பயணம் ரத்து

லண்டன் பயணம் ரத்து

நான் அந்த காட்சியில் வேகமாக ஓட வேண்டும் என்பதற்காகவே உதவி இயக்குனர் தள்ளிவிட்டார். அது இதுபோல் ஆகிவிட்டது. ஷூட்டிங் முடித்த கையோடு நான் லண்டன் போக இருந்தேன். இப்போது பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது என்று கவலைப்படுகிறார் விஷாகாசிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X