»   »  இரும்புத் திரை... முதல் முறை விஷாலுடன் இணைகிறார் சமந்தா!

இரும்புத் திரை... முதல் முறை விஷாலுடன் இணைகிறார் சமந்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல் முறையாக விஷாலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் நடிகை சமந்தா. புதிய இயக்குநர் மித்ரன் இயக்கும் இந்தப் படத்தை விஷாலே தயாரிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார் இந்த படம் முடிந்ததும், இந்தப் புதிய படத்தை விஷால் ஆரம்பிக்கிறார். தனது 'விஷால் பிலிம் பேக்டரி' மூலம் இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார்.

Vishal to join with Samantha for Irumbu Thirai

இந்தப் படத்துக்கு இரும்புத் திரை என்ற தலைப்பைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தலைப்பு சிவாஜி கணேசன் நடித்த பழைய படம் ஒன்றின் தலைப்பாகும்.

இந்த படத்துக்கு யுவன் இசையமைப்பார் என்று தெரிகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கப்பட இருக்கிறது.

English summary
For the first time Vishal is joining with top actress Samanth in Irumbu Thirai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil