அமலாபாலுக்கு சல்யூட் அடித்த பிரபல நடிகர்!
சென்னை : சமீபத்தில் நடிகை அமலாபால் தன்னை பாலியல் ரீதியாகச் சீண்டிய தொழிலதிபருக்கு எதிராக போலீஸில் புகார் அளித்திருந்தார்.
பல நடிகைகள் பாலியல் தொல்லை பற்றி வெளியில் சொல்ல பயந்தாலும், அமலாபால் தைரியமாக போலீஸ் வரை சென்று அந்த தொழிலதிபரை கைது செய்த வைத்தார்.
தற்போது இது பற்றி பேசியுள்ள நடிகர் விஷால், "பாலியல் தொல்லைக்கு எதிராக தைரியமாக புகார் கொடுத்ததற்காக சல்யூட்" எனக் கூறியுள்ளார்.

அமலாபால்
நடிகை அமலாபால், கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அமலாபால் போலீசில் ஒருவர் மீது புகார் செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், போலீஸில் புகார் செய்தார்.

டான்ஸ் நிகழ்ச்சியில் அமலாபால்
மலேசியாவில் நடைபெற இருந்த 'டான்சிங் தமிழச்சி' என்ற பெண்களுக்கான கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்தார் அமலாபால். இதற்காக அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் பலரும் நடனப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

டான்ஸ் பயிற்சி
இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலாபாலும் கடந்த சில தினங்களாகவே தி.நகரில் உள்ள ஸ்ரீதர் மாஸ்டரின் டான்ஸ் ஸ்கூலில் தீவிரமாக நடனப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பாலியல் தொல்லை
இந்நிலையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் தன்னிடம் பாலியல் ரீதியான அணுகுமுறையோடு பேசியதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொழிலதிபர் கைது
அந்தத் தொழிலதுபர் மீது பெண்ணின் மாண்புக்கு களங்கம் கற்பித்தல், பாலியல் தொல்லை கொடுத்தல், பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அமலாபாலின் புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசனை போலீசார் கைது செய்தனர்.

விஷால் பாராட்டு
தற்போது இது பற்றி பேசியுள்ள நடிகர் விஷால், "பாலியல் தொல்லைக்கு எதிராக தைரியமாக புகார் கொடுத்ததற்காக அமலாபாலுக்கு சல்யூட்" எனக் கூறியுள்ளார். தீவிர நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்த காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது இவரைப் போன்ற மனிதர்களுக்கு பாடமாக இருக்கும் எனவும் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











