விஷ்ணுவிஷாலின் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடங்கியது… விறுவிறுப்படையும் ஷூட்டிங் ஸ்பாட் !

சென்னை : மோகன்தாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அப்படத்தில் விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். அவரைத் தொடர்ந்த முக்கியமான கதாபாத்திரத்தில் இந்திரஜித் சுகுமார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மோகன்தாஸ்

மோகன்தாஸ்

எஃப்.ஐ.ஆர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால், மோகன்தாஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை களவு பட இயக்குனர் முரளி கார்த்திக் இயக்குகிறார். விக்ணேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

கதாநாயகி

கதாநாயகி

மோகன்தாஸ் படத்தில் விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். அவரைத் தொடர்ந்த முக்கியமான கதாபாத்திரத்தில் இந்திரஜித் சுகுமார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இத்திரைப்படத்தை விவி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது இதில், வெறித்தனமாக ரத்தம் தெறித்திருக்க முகத்தை சாதுவாக வைத்துக்கொண்டு விஷ்ணு விஷால் காணப்பட்டார். இந்த போஸ்டர் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.

சைக்கோ திரைப்படமா?

சைக்கோ திரைப்படமா?

விஷ்ணுவிஷால் நடித்த ரட்சசன் திரைப்படமும் ஒரு க்ரைம் த்ரில்லர் சைக்கோ திரைப்படமாகும். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, பெரும் வசூலை வாரிக் குவித்தது. அந்த திரைப்படத்தைப் போன்றே மோகன்தாஸ் திரைப்படமும் ஒரு க்ரைம் த்ரில்லிங் திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

தொடங்கியது

தொடங்கியது

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மோகன்தாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு பிறகு தொடங்கி உள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தையும் அதில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X