இறந்து 3 நாளாச்சு.. அழுகிய நிலையில் கிடந்த உடல்.. நடிகை சபர்ணாவின் கண்ணீர் கதை!

சென்னை: சினிமாவில் நாம் பார்த்து வியந்து, ரசித்த நடிகர்கள் பலரும் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை அனுபவித்தவர்களாகவே இருக்கிறார்கள். இருப்பினும் ரசிகர்களுக்காக அந்த சோகங்களை மறைத்துக் கொண்டு நடித்து இருக்கிறார்கள். அப்படி நம்மை மகிழ்வித்த நடிகை சபர்ணா தனது 29வது வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்டது ஏன்? சபர்ணாவின் கண்ணீர் கதை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சபர்ணா கோவை அரசு கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி படித்துள்ளார். கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே சபர்ணாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அதற்காக தனது திறமையை வளர்த்துக்கொண்டு வாய்ப்பு தேடி சென்னை வந்தார். சென்னையில் பல கம்பேனியில் ஏறி இறங்கிய பிறகு சபர்ணாவிற்கு சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

sabarna life story
Photo Credit:

சபர்ணா: அதன் பிறகு தான் சபர்ணாவிற்கு சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் பாசமலர், சொந்த பந்தம், புது கவிதை, தென்றல், மாயமோகினி என பல சீரியல்களில் நடித்தார் சபர்ணா. அதே வேளையில் ஜெயா டிவி, ராஜ் டிவியில் பாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வந்தார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த சபர்ணா விஷால் நடித்த பூஜை படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாகவும், மிகாமன் படத்தில் ஹன்சிகா மோத்வானியின் தோழியாகவும் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

இறந்து 3 நாளாசு: வளர்ந்து வரும் நடிகையாக இருந்தா சபர்ணா திடீரென தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் சபர்ணா தனியாக வசித்து வந்துள்ளார். மூன்று நாட்களுக்கு மேலாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படாமலே இருந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த கதவின் அருகில் செல்லும் போதெல்லாம் துர்நாற்றம் வீசியதால், சந்தேகம் அடைந்த அக்கப்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை தொட்டதுமே கதவு திறந்து கொண்டது.

sabarna life story
Photo Credit:

தற்கொலை: அப்போது, வீட்டிற்குள் சபர்ணா கை மணிக்கட்டு அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில், உடல் அழுகிய நிலையில் நிர்வாணமாக கடந்துள்ளார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் இருந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டது. சபர்ணா நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததாலும், கதவு தாழிடப்படாமல் இருந்தாலும் இது மர்ம மரணமாக கருதப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினார். பின் போலீசார் நடத்திய விசாரணையில் இது தற்கொலை என தெரியவந்தது.

சாப்பாட்டுகே கஷ்டம்: சபர்ணாவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் படவாய்ப்பு இல்லாததால் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். வாய்ப்பு இல்லாதால், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மிகவும் திணறி இருக்கிறார். மேலும், சாப்பாட்டிற்கு வழி இல்லாததால் வெறும் டீயை மட்டுமே குடித்துக்கொண்டு காலத்தை போக்கிக் கொண்டிருக்கிறார். சபர்ணாவின் வீடு முழுக்க டீ கப்புகள் இருந்துள்ளது. கஷ்டப்பட்டு முட்டி மோதி சினிமாவில் ஒருசில படங்களில் நடித்த சபர்ணா இன்றும் சற்று போராடி இருந்தால் நிச்சயம் ஜெயித்து இருப்பார். ஆனால், தவறான முடிவால் தனது 29 வயதிலேயே வாழ்க்கை முடித்துக்கொண்டது தான் வேதனை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X