காட்டான் வெற்றி விழா.. கம்ரூதீனுடன் கொண்டாடிய விஜே பார்வதி.. ரொம்ப எமோஷனல் ஆகிட்டாங்க
சென்னை: தொகுப்பாளினியாக இருந்து ஓரளவுக்கு பிரபலமடைந்த விஜே பார்வதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்துகொண்டு மேற்கொண்டு பிரபலமடைந்தார். அதிலும் கம்ரூதினுடன் சேர்ந்து ரெட் கார்டையும் பெற்றார். அப்போது அவர் ரெட் கார்டு பெற்றதை அனைவருமே கொண்டாடத்தான் செய்தார்கள். சொல்லப்போனால் முழுக்க முழுக்க அவரை சுற்றி நெகட்டிவிட்டிதான் இருந்தது. அதனையடுத்து விஜய் சேதுபதியுடன் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் நடித்தார்.
தமிழ்நாட்டில் சில யூடியூப் சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே பார்வதி. அவர் செய்த ஷோக்கள் சில மட்டும் வைரலாகியிருக்கின்றன. அப்படிப்பட்ட நிலைமையில் சர்வைவல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அது ஒர்க் அவுட் ஆகவில்லை. அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் பங்கேற்றார். அதில் அவர்தான் டைட்டிலை தட்டி செல்வார் என்று பலரும் கணித்திருந்தார்கள். அதற்கு தகுந்தபடிதான் விஜே பாருவின் விளையாட்டும் இருந்தது.

ரெட் கார்டு பெற்ற ஜோடி: நல்லபடியாக அவர் கிட்டத்தட்ட 90 நாட்கள்வரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது சக போட்டியாளர் சான்ட்ராவை விஜே பாருவும், கம்ரூதீனும் எட்டி உதைத்தார்கள். இதன் காரணமாக சான்ட்ராவுக்கு பேனிக் அட்டாக்கும் வந்தது. மருத்துவர்கள் உதவியோடு அவர் சகஜ நிலைமைக்கு திரும்பினார். ஆனால் அவரை அப்படி செய்த இரண்டு பேரையும் போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. அதன்படி அவர்கள் இரண்டு பேருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
தொடரும் நட்பு: போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு கம்ரூதினும், விஜே பார்வதியும் தங்களுக்குள் இருக்கும் பழக்கத்தை முறித்துக்கொள்வார்கள் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. விஜே பாருவுடன் ஒரு பாட்காஸ்டிலும் பங்கேற்றார் கம்மு. அப்போது, பாருவுடன் பழக வேண்டாம் என்று யாராவது சொன்னால்; நான் அப்படி சொன்னவர்களுடனான பழக்கத்தை யோசிக்காமல் கட் செய்துவிடுவேன் என்று ஓபனாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்து என்கிற காட்டான்: தமிழ்நாடு முழுவதும் பாருவுக்கு எதிரான மனநிலையே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமையில் அவர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் காட்டான் வெப் சீரிஸில் நடித்திருக்கிறர். சமீபத்தில் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் ஓரளவுக்கு சுமார் வரவேற்பையே பெற்றது. அதேசமயம் விஜே பார்வதி, வடிவேலு முருகன் ஆகியோர் நல்ல பெயரை சம்பாதித்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்த வெப் சீரிஸின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் கம்ரூதீனுடன் கலந்துகொண்டார் பாரு.
எமோஷனல் போஸ்ட்: இந்த வெப் சீரிஸ் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, "காட்டான் எப்போதும் எனக்கு சிறப்பானதாகவே இருக்கும். ஒரு படமாக மட்ட்மில்லாமல் நான் உணர்ந்து வாழ்ந்த ஒரு உணர்வாக இருக்கும். எனது வாழ்க்கையில் இதுதான் முதல் வெற்றி விழா. என் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. குழப்பங்கள், கடினமான நாட்கள் இருந்தன. இறுதியில் நீங்கள் அன்பை மட்டுமே கொடுத்தீர்கள். அதை மட்டுமே பார்க்கும் பயணம். காட்டான் பார்த்து, உணர்ந்து ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் உண்மையான அன்பும், விமர்சனங்களும் எனக்கு முக்கியம். என்றும் நன்றியுடன்.." என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications















