உள்ளாடை ரொம்ப முக்கியம்.. கயாடு லோஹர் போல டிரெஸ் பண்ணனுமா?.. விஜே பார்வதி கொடுக்கும் டிப்ஸ் பாருங்க!
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் 120 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில், அந்த படத்தில் நடித்த கயாடு லோஹருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும், படத்தில் திருமண விழாவின் போது தொடை தெரிய பார்ட்டி வியர் அணிந்து கொண்டு அவர் ஆட்டம் போடும் காட்சிகள் ரசிகர்களை ஆட்கொண்டுள்ளது.
விஜே பார்வதி தனது சமூக வளைதள பக்கத்தில் கயாடு லோஹர் போல பாடி ஹக்கிங் உடையை அணிந்து கொண்டு பெண்கள் எப்படி பார்த்தி பண்ணலாம் என்பதற்கு சூப்பரான டிப்ஸ் கொடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

18 பிளஸ் ஜோக்குகளை அடிப்பதும், படு போல்டாக அடல்ட் கன்டென்ட்களை பேசி வைரலாகும் விஜே பார்வதி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அடுத்த நயன்தாரா: தமிழ் சினிமாவில் ஓவர் கிளாமர் காட்டி நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நயன்தாரா. கஜினி, வில்லு, வல்லவன், ஏகன், பில்லா, ஆரம்பம், கள்வனின் காதலி, ஈ, சத்யம் என பல படங்களில் கவர்ச்சி பொங்க நடித்து தான் டாப் ஹீரோயினாக மாறினார். இளைஞர்களை வெகுவாக கவர்ந்து தான் ஜோதிகா, த்ரிஷா, அசின் உள்ளிட்டோரை ஓவர்டேக் செய்தார். இந்நிலையில், அந்த வரிசையில் டிராகன் படத்தின் ஹீரோயின் கயாடு லோஹர் அடுத்த நயன்தாராவாக மாற அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ராஷ்மிகா மந்தனாவை போல கயாடு லோஹருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஓவர்நைட்டில் கிடைத்துள்ளனர்.
தொடை தெரிய கவர்ச்சி நடனம்: டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனை திருமணம் செய்து கொள்வதற்காக நடைபெறும் திருமண வரவேற்பு விழாவின்போது கயாடு லோஹர் உடலை ஒட்டிய ஆடையை அணிந்து கொண்டு பார்ட்டி பண்ணும் போது தொடை தெரிய கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். அந்த காட்சிகள் எல்லாம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.
டிராகன் படத்தின் வசூல்: அசாமை சேர்ந்த கயாடு லோஹர் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் டிராகன் படத்தின் மூலம் இந்த ஆண்டு அறிமுகமானார். அடுத்ததாக இதயம் முரளி படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. டிராகன் படத்துக்கு முன்னதாகவே இதயம் முரளி படத்தில் தான் அவர் கமிட் ஆனார் என்றும் கூறுகின்றனர். பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான டிராகன் திரைப்படம் இதுவரை இந்தியளவில் 105 கோடி ரூபாய் வசூலையும் உலகளவில் 137 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர். 18வது நாளான நேற்று கூட அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பதாக கூறுகின்றனர்.
உள்ளாடை ரொம்ப முக்கியம்: உடலை ஒட்டியபடி இருக்கும் பாடி ஹக்கிங் பார்ட்டி வியர்களை உடுத்துவதற்கு உள்ளாடையை சரியாக அணிய வேண்டும். சைடில் தொடை தெரியும் அளவுக்கு கட் இருக்கும் என்பதால் கன்னா பின்னாவென வேறு எதுவும் தெரிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என மறைமுகமாக எச்சரித்துள்ளார். பியர் ஷேப் பாடிக்கு இந்த பார்ட்டி வியர் கச்சிதமாக இருக்கும் என அவரும் ஒன்றை அணிந்துக் கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











