‘மிஸ் யூ‘ கணவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து விடைபெற்ற பிரியங்கா தேஷ்பாண்டே!
சென்னை: பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது, அவர் கணவர் வசியை கட்டி அணைத்து மொத்தம் கொடுத்து விடைபெற்றுள்ளார். அந்த வீடியோவை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இந்த ஆண்டு ஆரம்பமே அட்டகாசம் என பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ, பாட்டு நிகழ்ச்சி, டான்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளினியாக இருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி கடைசி வரை வீட்டில் இருந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். அதன் பின், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் மணிமேகலையுடன் சலசலப்பில் சிக்கினாலும், அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது பிரியங்கா தான். இவருக்கு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசி என்பவரை திருமணம் நடைபெற்றது.

பிரியங்கா தேஷ்பாண்டே: பிரியங்காவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றதால், தன்னுடைய இரண்டாவது திருமணம் பற்றி யாருக்குமே சொல்லாமல் ரகசியமாக வைத்து இருந்தார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பிரியங்காவின் கணவர் வசி, இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார். கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மிஸ் யூ: திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகளை பிரியங்கா தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். ஷூட்டிங் இருந்தால் சென்னையில் அம்மா வீட்டிலும், ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கணவருடன் லண்டனில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இந்த வருடம் புத்தாண்டை கணவருடன் கொண்டாட லண்டன் சென்ற பிரியங்கா, தற்போது லண்டனில் இருந்து இந்தியாவிற்கு கிளம்பி உள்ளார். இனி கணவரை சந்திக்க இரண்டு மாதமாவது ஆகும் என்பதால், கணவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ' மிஸ் யூ' என்று அவரிடம் இருந்து பிரியா விடை பெற்றுள்ளார். பிரியங்காவை பிரிய மனமில்லாத வசியும் சற்று கலங்கி 'மிஸ் யூ பேபி' என கூறியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிரியங்கா, 2026 ஆரம்பமே அருமையாக இருந்தது. நிறைய அன்பு கிடைத்தது, நன்றியுணர்வு உணர்ந்தேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











