விஎஸ்பி33ல் இருந்து அமலாபால் நீக்கப்பட்டது ஏன்... உண்மை பின்னணி என்ன.. ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!

விஜய்சேதுபதி படத்தில் இருந்து அமலாபால் நீக்கப்பட்டதற்காகக் கூறப்படும் காரணங்கள் உண்மையானதல்ல என்பது தெரிய வந்துள்ளது.

Recommended Video

Actress Amala paul : விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட அமலா பால்- வீடியோ

சென்னை: விஜய் சேதுபதி படத்தில் இருந்து அமலாபால் நீக்கப்பட்ட விவகாரம் தான் தற்போது கோடம்பாக்கத்தில் டாக் ஆப் தி டவுணே. உண்மை நிலை என்ன? யார் சொல்வது உண்மை? என்பது குறித்து தெரிந்து கொள்ள நாமும் களத்தில் இறங்கி விசாரித்தோம்.

வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் முதலில் நாயகியாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அதிரடியாக அமலாபாலை தூக்கி விட்டு, அவருக்குப் பதில் மேகா ஆகாஷை நாயகியாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக அமலாபாலும் தனது பக்க விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், 'ஆடை' டிரெய்லரை பார்த்தே இந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஆணாதிக்க, அகந்தையான மனநிலையை காட்டுகிறது. விஜய்சேதுபதியை காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் அவரது ரசிகை" என அவர் கூறியுள்ளார்.

உண்மையிலேயே அமலாபால் சொல்வது எந்தளவுக்கு உண்மை என்பது குறித்து நாமும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் விசாரித்தோம். அதில் பல உண்மைகள் தெரிய வந்தது.

சிம்பிளான நடிகை:

சிம்பிளான நடிகை:

அதாவது, தன் அறிக்கையில் கூறியுள்ளபடி நிஜத்திலும் அமலாபால் மிகவும் நட்பானவர் தானாம். வெறும் பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருக்காமல், தான் நடிக்கும் படத் தயாரிப்பாளர்களின் நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டு, அதற்குத் தகுந்தபடி தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து கொடுப்பவராம்.

உண்மை தான்:

உண்மை தான்:

இதற்கு முன்பு அமலாபால் நடித்த எந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இதுபோன்ற குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியது கிடையாது. காரணம் தனது எல்லாப் பட நிறுவனங்களுடனும் அவர் ஆதரவாகவே இருந்துள்ளார். தற்போது நடித்து வரும் படங்களின் நிலை குறித்து அவரே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எளிமையானவர்:

எளிமையானவர்:

ஆனால், அவர் நடித்து முடித்துக் கொடுத்த படத் தயாரிப்பாளர்களுமே இதுவரை இப்படி அவரைக் கூறியது இல்லை என்கிறார்கள். மைனா படத்தின் படப்பிடிப்பின் போதும் கூட, காட்டுக்குள் படக்குழுவினருடன் தான் அவர் தங்கியிருந்துள்ளார். அப்போதும் தனக்கென தனிச் சிறப்பு வசதிகள் எதையும் அவர் கேட்டுப் பெறவில்லை. அப்போது எப்படி இருந்தாரோ, இப்பவும் அப்படியே தான் இருக்கிறார் என்கின்றனர் மைனாவுடன் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சிலர்.

இது தான் காரணம்:

இது தான் காரணம்:

இந்த மாதிரியான குற்றச்சாட்டில் அமலாபால் சிக்குவது இது தான் முதல்முறையாம். அதனால் தான் கொதித்துப் போய் தன் பக்க விளக்க அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். தற்போதும் கூட, விஜய் சேதுபதி படத்திற்காக அவர் தனது சொந்தக் காசில் தான் ஆடைகள் வாங்க போன போது தான், ‘ஆடை' பட விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X