ஆண்ட்ரியா எப்போ தான் உங்க "ப்ரோக்கன் விங்" புத்தகம் வெளியாகும் ?
Recommended Video
சென்னை : தரமணி திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து கொண்டிருந்த ஆண்ட்ரியாவிற்கு தளபதி 64 திரைப்படத்தில் ஒரு முக்கியமான வாய்ப்பு கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்த செய்தி. வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் ஆண்ட்ரியா இயக்குனரிடம் கதை பற்றி கேட்கக்கூட இல்லையாம்.
சிறிது காலமாக பயங்கரமான மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டு இருந்த ஆண்ட்ரியா தற்போது திடீரென அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். பல ஸ்டேஜ் ஷோக்களிலும் கூட பங்கேற்கிறார்.

திருமணமான ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்ததும் அதனால் அவருக்கு ஏற்பட்ட உடல் ரீதியான மற்றும் மன ரீதியிலான துன்புறுத்துதலில் இருந்து பல சிகிச்சைக்கு பிறகு இப்போது தான் மீண்டு வந்துள்ளார்.
தான் வாழ்க்கையை இருட்டாகிய நபரை பற்றி தான் எழுதிய 'புரோக்கன் விங்' கவிதை புத்தகம் மூலம் வெளியிடுவேன் என்று கூறிய ஆண்ட்ரியா இதுவரையில் அந்த புத்தகம் என்று வெளியாகும் என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை.
ஆனால் அந்த நபர் ஒரு அரசியல் வாரிசு என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இவர் சினிமாவில் இப்போது இருக்கிறாரா அல்லது ஏற்கனவே இருந்தாரா என்பது பற்றி எல்லாம் ஆண்ட்ரியா கூறினால் மட்டுமே உண்மை வெளிவரும். சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாய் பரவி வரும் இந்த செய்தி பற்றின பல கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











