என்னம்மா ஜாக்கெட் டிசைன் இது!.. இது ‘பா’ கழுத்தா.. அல்லது ‘யு’ கழுத்தா.. குழப்பிய ஜூபிளி குயின்!
சென்னை: ஜூபிளி, மாடர்ன் லவ் சென்னை வெப்சீரிஸ்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர் நடிகை வாமிகா கபி. அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இணைந்து ஜீனி படத்தில் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
ஓடிடி வெப் தொடர்களில் சமீப காலமாக உச்சக்கட்ட தாராளம் காட்டி நடித்து வரும் வாமிகா கபி தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களில் அவரது ஜாக்கெட் டிசைன் பார்த்து ரசிகர்கள் வாவ் என வாயை பிளந்து வருகின்றனர்.

நடிகை வாமிகா கபி: கரீனா கபூர் நடித்த ஜப் வி மெட் படத்தின் மூலம் அறிமுகமானவர் வாமிகா கபி. செல்வராகவனின் இரண்டாம் மனைவி கீதாஞ்சலி செல்வராகன் இயக்கத்தில் தமிழில் வெளியான மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனால், அதன் பின்னர் இவருக்கு இங்கே சரியான படங்கள் அமையவில்லை. மீண்டும் இந்தியில் வெப்சீரிஸ்களில் எல்லாம் இஷ்டத்துக்கு உடைகளை குறைத்தும், படு போல்டாகவும் நடித்து மிரள விட்டு வருகிறார்.
பார்பி பொம்மை போல: லேட்டஸ்ட்டாக ஃபேஸ் எனும் அட்டை படத்திற்காக ஆடு டிசைன் டாப்ஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த வாமிகா கபி அதே ஃபேஸ் இதழின் கவர் போட்டோஷூட்டில் கவர்ச்சிகரமாக பார்பி டால் போல பிங்க் நிற உடையை அணிந்து கொண்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
பா கழுத்தா.. யு கழுத்தா?: அதில், அவர் அணிந்திருக்கும் ஜாக்கெட்டின் டிசைனை பார்த்த ரசிகர்கள் முதலில் பா கழுத்து போல ஆரம்பித்து அதன் பின்னர் யு கழுத்து போல டிசைன் மாறியிருக்கிறதே என கமெண்ட் போட்டு வருகின்றனர். பிங்க் நிற கூலர்ஸை அணிந்துக் கொண்டு போதை ஏற்றும் கண்களை காட்டி இளம் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக மாற்றி வருகிறார் இந்த ஜீனி பட நடிகை.
குவியுது லைக்ஸ்: சுமார் 30 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள வாமிகா கபி லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோக்களை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் கவர்ச்சி குயின் என்றும் ஸ்க்ரீனை சும்மா ஃபயரா தெறிக்கவிடுறீங்க என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











