இந்த மாதிரி லுக் உங்களுக்கு செட்டே ஆகலை.. கிளாமர் ஸ்டில் வெளியிட்ட நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!
சென்னை: கிளாமர் ஸ்டில்ஸ் வெளியிட்ட பிரபல நடிகையிடம், இந்த மாதிரி லுக் உங்களுக்கு செட் ஆகவில்லை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா லாக்டவுன் காரணமாக நடிகைகள் இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு நேரத்தைச் செலவழிக்கின்றனர்.
தங்களை விதவிதமான போட்டோஸ் எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி வருகின்றனர்.

விதவித போட்டோஸ்
இதற்கு வந்துவிழும் லைக்ஸ் மற்றும் புகழும் கமென்ட்களால் புல்லரித்து போகின்றனர். இது நடிகைகளுக்கு ஜில் விளையாட்டு. புகைப்படம் மட்டுமின்றி தங்களது நடனம், சமையல், பாடல் என வீடியோக்களாலும் நிரப்பி வருகின்றனர், அதை. பின்னர் ரசிகர்கள் அவர்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வைரலாக்குவார்கள். அப்படி அடிக்கடி விதவிதமான போட்டோஸ்களை பதிவிடும் நடிகைகளில் ஒருவர் வாமிகா கப்பி!

மாலை நேரத்து மயக்கம்
தமிழில், செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், இவர். பஞ்சாபி நடிகையான இவர், இந்தியில் சிக்ஸ்டீன் என்ற படம் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் சுதிர்பாபு ஜோடியாக, பாலே பஞ்சு ரோஜு என்ற படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் கோதா, நடிகர் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ் ஆகியோருடன் நைன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

புகைப்படங்கள்
இவர், கதக் நடனக் கலைஞர். லாக்டவுனால் வீட்டில் இருக்கும் நடிகை வாமிகா, அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு தனது அம்மாவின் புடவையை உடுத்தி பதிவிட்டிருந்த புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் இப்போது புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களை அவரே செல்பி ஸ்டைலில் எடுத்துள்ளார்.

இதுதான் கில்லர் லுக்கா?
தரையில் கேமராவை வைத்து எடுத்துள்ள இந்த போட்டோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்துள்ளனர். கமென்டுகளும் பஞ்சமில்லாமல் வந்து விழுந்திருக்கிறது. ஒரு நெட்டிசன், 'இந்த ஸ்டைல்ல இறங்கினா, நீங்க நடிகை திஷா பதானிக்கு டஃப் பைட் கொடுப்பீங்க போலிருக்கே' என்று தெரிவித்துள்ளார். 'இதுதான் கில்லர் லுக்கா? ஸ்டன்னிங் என்று சிலர் கூறியுள்ளனர்.

உங்களுக்கு செட் ஆகலை
சிலர், இதுபோன்ற போட்டோக்களை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர். 'என்னாச்சு உங்களுக்கு? இந்த மாதிரி டிரெஸ் போட்டு போட்டோ எடுக்க மத்த நடிகைங்க இருக்காங்க. உங்களோட சமீப கால போட்டோஸ் பார்த்து அதிர்ச்சி அடையறேன். இந்த மாதிரி லுக்கெல்லாம் உங்களுக்கு செட்டே ஆகலை. பி கிரேடு நடிகை மாதிரி இருக்கு என்று தெரிவித்துள்ளனர்.

எப்படி இவ்வளவு அழகு?
மேலும் சிலர் நீங்க இப்படி ஸ்டில்களா பதிவு பண்ணுங்க.. இந்தி வாய்ப்பு தேடி வரும் என்று கூறியுள்ளனர். ஒருவர் நீங்க கொடுத்திருக்கிறது என்ன போஸ்? அதுக்கு ஏதும் பெயர் இருக்கா? என்று கேட்டுள்ளார். பலர் வழக்கம்போல, நீங்க மட்டும் எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க? என்றும் உங்க அழகுக்கு ஈடு இணையே இல்லை என்றும் கூறியுள்ளனர். நடிகை வாமிகாவின் இந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications