சூப்பர் டீலக்ஸ்: விஜய் சேதுபதி 80 டேக், சமந்தா எத்தனை டேக் தெரியுமா?
Recommended Video

சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா எத்தனை டேக் வாங்கினார் என்பது தெரிய வந்துள்ளது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது. படத்தை பார்த்த சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

இந்த படத்தில் சமந்தா ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க நதியா மறுத்தது போன்று சமந்தாவின் கதாபாத்திரத்தில் நடிக்க 2 முன்னணி நடிகைகள் மறுத்துள்ளனர்.
வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம் என்பதால் அவர்கள் மறுத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து சமந்தா தன் கணவர் நாக சைதன்யாவிடம் கூறியபோது அவரே அதிர்ச்சி அடைந்தாராம்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு காட்சிக்கு ரம்யா கிருஷ்ணன் 37 டேக்கும், விஜய் சேதுபதி 80 டேக்கும் வாங்கியுள்ளனர். ஆனால் சமந்தா அதிகபட்சமாக 3 டேக்குகள் தான் வாங்கியுள்ளார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து சமந்தா, நாக சைதன்யாவின் மஜிலி படம் அடுத்த மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











