ஜெய் பட நடிகையின் முதல் சம்பளத்தை கேட்டால் அப்படியே 'ஷாக்' ஆகிடுவீங்க
சென்னை: நடிகை பியா பாஜ்பாய் தனது முதல் வேலை, சம்பளம் பற்றி தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் ஜெய் காதலியாக நடித்து பிரபலமானவர் பியா பாஜ்பாய். ஜீவாவின் கோ படம் மூலம் நல்ல பெயர் வாங்கினார். பூசினாற் போன்று இருந்த பியா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார்.
பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பியா. பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடிக்க வந்த பியா தனக்கென்று ஒரு பெயர் எடுத்துவிட்டார். சினிமா ஆசையில் மும்பைக்கு வந்த பியா சீரியல்களுக்கு டப்பிங் பேசினார்.
இந்நிலையில் அவர் தனது முதல் சம்பளம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
முதல் வேலை
மும்பையில் என் முதல் வேலை ஒருவருக்கு இரண்டு வரிகள் டப்பிங் பேசியது. அதற்கு ரூ. 300 சம்பளம் கிடைத்தது. உங்களுடைய முதல் வேலை என்ன? என்று தனது ரசிகர்களிடம் கேட்டு ட்வீட்டியுள்ளார் பியா.
கேமரா
தினமும் 3 மணிநேர வேலைக்கு ரூ. 70 சம்பளம். பதிவாளர் அலுவலகத்தில் போலராய்டு கேமராவை பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும் என்று ஒருவர் பதில் அளித்துள்ளார்.
சம்பளம்
முதல் வேலையா எனக்கு வேலையே இல்லை என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
2013
2013ம் ஆண்டில் தினமும் ரூ. 500 சம்பளம் என்று பியாவின் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











