கோலிவுட்டில் அஜித் தான் என் முதல் கிரஷ், அந்த சிரிப்பு இருக்கே: விஷால் ஹீரோயின்
சென்னை: ராஷி கன்னாவுக்கு கோலிவுட்டில் எந்த நடிகர் மீது கிரஷ் ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ராஷி கன்னா. ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்துள்ளார். கோலிவுட் இயக்குநர்கள் விரும்பும் நடிகையாக மாறி வருகிறார்.
தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் அவரின் மார்க்கெட் நல்லபடியாக உள்ளது.

அஜித்
எனக்கு சிறு வயதில் ஏற்பட்ட முதல் கிரஷ் என்றால் அது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான். கோலிவுட்டில் எனது முதல் கிரஷ் அஜித் சார். அவரின் சிரிப்பு அசத்தலாக இருக்கும். அவரின் படம் பார்க்கும்போது அவர் எப்படா சிரிப்பார் என்று காத்திருப்பேன். அஜித் சார் நடித்த விஸ்வாசம் படம் பார்த்திருக்கிறேன்.

விஜய் தேவரகொண்டா
நான் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறேன். அவர் தனது படங்களில் ஹீரோயினுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுப்பதில் தவறு இல்லை. அவர் இன்றைய தலைமுறையை பிரதிபலிக்கிறார்.

படங்கள்
தற்போதைய தலைமுறையினருக்கு முத்தம் எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அதுவும் படங்களில் முத்தக் காட்சிகள் சாதாரணமாகிவிட்டது என்று ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்
நீங்கள் விஜய் தேவரகொண்டாவாக இருந்தால் யாருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுப்பீர்கள் என்று ராஷி கன்னாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் என் அடுத்த பட ஹீரோயினுக்கு என்றார். அப்படி என்றால் ராஷியும், விஜய்யும் லிப் டூ லிப் காட்சியில் நடிக்கிறார்கள் போன்று என்று ரசிகர்கள் பேசத் துவங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











