யோகிபாபுவாக மாறி விபூதி அடித்துக் கொள்ள ரூ. 45 லட்சம் செலவு செய்த ப்ரியங்கா
Recommended Video
சென்னை: நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சமீபத்திய கெட்டப்பை பார்த்து கிண்டல் செய்தது இருக்கட்டும் அவர் அணிந்திருந்த உடை, நகை, காலணிகளின் விலையை கேட்டால் அசந்துவிடுவீர்கள்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த எம்.இ.டி. காலா 2019 நிகழ்ச்சிக்கு வித்தியாசமான கெட்டப்பில் வந்த பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்தனர்.
யோகிபாபுவுக்கு பெண் வேடம் போட்டது போன்று இருப்பதாக சிரித்தார்கள். அந்த கெட்டப் போட ப்ரியங்கா எவ்வளவு செலவு செய்தார் என்று தெரிந்தால் இப்படி பேச மாட்டீர்கள்.

ரூ. 45 லட்சம்
ப்ரியங்கா சோப்ரா யோகிபாபு கெட்டப் போட ரூ. 45 லட்சத்து 83 ஆயிரத்து 280 செலவு ஆகியுள்ளது என்று வோக் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ப்ரியங்கா அணிந்திருந்த ஜிம்மி சூ காலணி மட்டுமே ரூ. 24 ஆயிரமாம்.

கம்மல்
ப்ரியங்கா சோப்ரா வைரங்கள், ஒயிட் கோல்டு நகைகள் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த பெரிய காதணிகளின் விலை ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்து 800 மட்டுமே. கவரிங் கம்மல் போன்று இருந்தது என்று விமர்சனம் எழுந்த நிலையில் அதன் விலை தெரிய வந்துள்ளது.

பணியாளர்கள்
ப்ரியங்காவின் மேக்கப், தலைமுடியை மட்டும் அல்ல அவரின் உடையையும் பலரும் விமர்சித்தனர். அந்த உடையை 10 பேர் கொண்ட குழு 1, 500 மணிநேரம் வேலை செய்து உருவாக்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

பாசம்
ப்ரியங்கா சோப்ராவின் கெட்டப் பற்றி மும்பையில் இருக்கும் அவரின் அம்மா மது சோப்ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, என் மகள் தூரத்தில் இருக்கிறார். அவர் மட்டும் என் அருகில் இருந்திருந்தால் கட்டி அணைத்திருப்பேன். அந்த கெட்டப்பில் அவர் அவ்வளவு அழகாக இருந்தார் என்றார்.


Click it and Unblock the Notifications











