என்னது, என்னை படத்திலிருந்து தூக்கிட்டாங்களா... யார் சொன்னது? - கொதிக்கும் அமலா பால்

By Shankar

சென்னை: தெலுங்குப் படத்திலிருந்து தன்னை நீக்கியதாக வந்த செய்திகள் தவறானவை என்று கொதித்துள்ளார் நடிகை அமலா பால்.

அமலா பாலுக்கும் இயக்குநர் விஜய்க்கும் விரைவில் திருமணம் ஆகப் போகிறது. இதனை இருவருமே அறிவித்துவிட்டனர். இப்போது ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்த பிறகு, புதுப்படங்களில் நடிக்க மாட்டார் அமலா என்றும் விஜய் அறிவித்துள்ளார்.

நீக்கமா?

நீக்கமா?

இந்த நிலையில், வஸ்தா நே வெனகா என்ற தெலுங்குப் படத்துக்காக அவரை ஒப்பந்தம் செய்திருந்தது ராமதூதா எனும் நிறுவனம். படமே இன்னும் ஆரம்பிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளப் போகும் அமலா, திருமணத்துக்குப் பின் நடிக்க வராவிட்டால் பெரும் இழப்பு என்பதால், அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள் என ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

விளக்கம்

விளக்கம்

இதனால் கடுப்பான அமலா, உடனே ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "ஜனவரி மாதம் என்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தது இந்த நிறுவனம். அப்போது மார்ச்சில் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்றனர். நானும் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்தேன். மார்ச் - மே மாதங்களுக்குள் படத்தை முடித்திருக்க வேண்டும்.

ஆரம்பிக்கவே இல்லை

ஆரம்பிக்கவே இல்லை

ஆனால் இவர்கள் இன்னும் ஷூட்டிங்கையே தொடங்கவில்லை. பொதுவாக வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்குப் போக வேண்டும் என்றால் அதற்கு பல நாட்கள் முன்பாகவே என்னுடைய பாஸ்போர்ட், உதவியாளர்கள் பாஸ்போர்களை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதையும் செய்யவில்லை. இப்போது மே மாதம் வந்துவிட்டது. ஷூட்டிங்கும் போகவில்லை. சொன்னபடி எதையுமே அவர்கள் செய்யவில்லை.

தனிப்பட்ட விஷயம்

தனிப்பட்ட விஷயம்

ஆனால் என் திருமணத்தைக் காட்டி, என்னை குறை சொல்வதிலேயே குறியாக உள்ளார்கள். என் திருமணம் பற்றி நான் அவர்களுக்குக் கூறவில்லையாம். ஏன்.. எதற்காகக் கூற வேண்டும்? என் திருமணம் தனிப்பட்ட விஷயம். அதுவும் ஜூனில்தான் நடக்கிறது. இவர்கள் படப்பிடிப்பு மே மாதம் முடிந்திருக்க வேண்டும்.

பழிபோடுவதா?

பழிபோடுவதா?

ஆனால் தங்கள் பக்க தவறுகளை மறைத்துக் கொண்டு, என் திருமணத்தை வைத்து, என் மீது சேறு பூச முயல்கிறார்கள். திருமணம் என்பது ஆயுள்கால நிகழ்வு. இந்த புனிதமான விஷயத்தை வைத்து அற்பத்தனமாக பழிபோடுவதை நினைத்தால் மனம் வலிக்கிறது.

ஒரு நடிகையாக, என் தொழில் மீது என்றுமே நான் மரியாதை வைத்திருப்பவள். எனக்கு வாய்ப்பு தருபவர்களும் இப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பவள். அதனால்தான் இந்த விளக்கம்," என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X