விஜய்தான் அதற்கு காரணம்.. எப்போதும் அதை மறக்கவே மாட்டேன்.. பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்
சென்னை: தமிழில் தனது திரை பயணத்தை ஆரம்பித்து பாலிவுட் சென்று; அங்கிருந்து ஹாலிவுட் சென்று செட்டில் ஆனவர் பிரியங்கா சோப்ரா. அதனையடுத்து நிக் ஜோனஸை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றார். திருமணத்துக்கு பிறகு நடிப்பை விடாத அவர்; அடுத்ததாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக வாரணாசி படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயங்கள் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.
பிரியங்கா சோப்ரா கடந்த 2000ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். அதனையடுத்து விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அப்படம் தோல்வியடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு சென்று அங்கே தனக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். வரிசையாக ஹிட் படங்களில் நடித்த அவர்; ஹாலிவுட்டுக்கும் சென்று நடிக்க ஆரம்பித்தார். அங்கே பிஸியாக இருந்தபோதே நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மால்டி என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

விஜய் பற்றி பேட்டி: அடுத்ததாக அவரது நடிப்பில் வாரணாசி திரைப்படம் வரவிருக்கிறது. அதனை ராஜமௌலி இயக்க; மகேஷ் பாபு ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் தமிழன் என்ற படத்தில் 2002ஆம் ஆண்டு முதன்முறையாக நடித்தேன். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் பார்த்த சில விஷயங்கள்தான் நட்சத்திர அந்தஸ்து குறித்த புரிதலை எனக்கு ஏற்படுத்தியது என்று சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் ஹீரோ பெயர் விஜய்.
இன்னும் நினைவு இருக்கிறது: விஜய்யின் மகத்தான புகழ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் படம்தான் எனக்கு முதலில் புகழை பெற்றுக்கொடுத்தது. அந்த ஷூட்டிங்கில் விஜய் நடனமாடும்போதும், மற்ற வேலைகளை செய்யும்போதும் சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என எனக்கு தெரியவில்லை. அதேசமயம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்ததை ஸ்க்ரீனிலும் பார்த்த பிறகுதான் புரிந்தல் உருவானது.
தெய்வீக உணர்வு: இந்தியாவில் மக்கள் திரைப்படங்களை அவ்வளவு நேசிப்பார்கள். என்ன மாதிரியான அன்பினை ரசிகர்கள் கொடுக்கிறார்கள் என்பதையும் அப்போது உணர்ந்தேன். அது ஒரு தெய்வீக உணர்வு என உணர்ந்தேன். அப்போதெல்லாம் நடிப்பும், புகழும் சமம்தான். நட்சத்திர அந்தஸ்துடன் இருப்பதால்தான் நாம் இந்தத் துறையில் இருப்பதாக நினைத்திருந்தேன். அந்த வயதில் எனக்கு அப்படி ஒரு புரிதல்தான் இருந்தது. அனாஅல் வேலை செய்தால்தான் அந்தப் புகழ் நமக்கு கிடைக்கும் என்பதை பிறகுதான் தெரிந்துகொண்டேன்" என்றார். இந்தப் பேட்டி விஜய் ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications















