அப்போ பிகினி.. இப்போ நாக் நாக் வீடியோவா.. லாக்டவுனில் தம்பியுடன் சேட்டை செய்யும் தனுஷ் பட நாயகி!

மும்பை: லாக்டவுன் நேரத்தில் போர் அடிக்காமல் இருக்க தனது தம்பியுடன் நடிகை சாரா அலி கான் நாக் நாக் விளையாட்டை விளையாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Dhanush Actress Sara Ali Khan Bikini with Brother| Atrangi Re | AkshayKumar

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான், தற்போது பாலிவுட்டின் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

ஆலியா பட்டை தொடர்ந்து பாலிவுட் ரசிகர்களின் லேட்டஸ்ட் கனவுக் கன்னியாகவும் சாரா அலி கான் வலம் வருகிறார்.

தனுஷ் ஜோடி

தனுஷ் ஜோடி

தமிழில் பிசியாக கர்ணன் படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், அடுத்ததாக பாலிவுட்டில் அட்ரங்கி ரே படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அமிதாப் பச்சன் உடன் ஷமிதாப் படத்தில் நடித்த தனுஷ், அக்‌ஷய் குமாருடன் இந்த படத்தில் நடிக்க உள்ளார். தனுஷுக்கு ஜோடியாக சாரா அலி கான் அட்ரங்கி ரே படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

காசி விஸ்வநாதர் கோயிலில்

காசி விஸ்வநாதர் கோயிலில்

வாரணாசியில் அட்ரங்கி ரே படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், தனது தாயுடன் காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார் சாரா அலி கான். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான் இந்து மதத்தின் புனிதத்தை கெடுத்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.

தம்பியுடன் பிகினியில்

தம்பியுடன் பிகினியில்

மேலும், தனது தம்பியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, அவருக்கு வாழ்த்து தெரிவித்த சாரா அலிகான், தனது சமூக வலைதள பக்கத்தில், பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அப்போதும் ஒரு சர்ச்சையை கிளப்பினார். அந்த புகைப்படத்தில், சாரா அலி கானை தொட முடியாமல் அவரது தம்பி இப்ராஹிம் தவித்ததையும் நெட்டிசன்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

தம்பியுடன் விளையாட்டு

இப்படி சாரா அலி கான் என்ன செய்தாலும், பாலிவுட்டில் சர்ச்சையாக வெடித்து வந்த நிலையில், இந்த லாக் டவுன் நேரத்தில், தனது தம்பியுடன் "Knock Knock" விளையாட்டை விளையாடி, அதன் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு தனது ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளார் சாரா அலி கான்.

குழந்தைத் தனம்

குழந்தைத் தனம்

குழந்தைப் பருவத்தில் அனைவரும் விளையாடிய "நாக் நாக்" விளையாட்டை தனது தம்பியுடன் விளையாடிய சாரா அலி கானின் குழந்தைத் தனத்தை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வீடியோவை 4 மில்லியன் ரசிகர்கள் லைக் செய்து வைரலாக்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X