»   »  அனுஷ்கா மேல எல்லாரும் ஆசைப்படுறாங்க... ஆனா அனுஷ்காவோட ஆசை?

அனுஷ்கா மேல எல்லாரும் ஆசைப்படுறாங்க... ஆனா அனுஷ்காவோட ஆசை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனுஷ்கா... இந்தப்பெயரை இப்போது உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு லிங்காவின் ரீச் ரசிகர்களை எட்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுஷ்கா நடித்த அருந்ததி படம் இன்றைக்கும் டிவியில் ஒளிபரப்பினால் அதை பார்க்காத குட்டீஸ்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அனுஷ்கா சின்னஞ்சிறுசுகள் முதல் இளசுகளுக்கும் மனதிற்குப் பிடித்த நடிகையாகவே இருக்கிறார்.

ஆனால் அவருக்கோ ஒரு கவலை இருக்கிறதாம்.அதாவது காலம் கடந்து நிற்கும் நடிகை என்ற பெயர் வாங்கவேண்டும் என்பதுதானாம். அந்த காலத்து நடிகைகளைப் போல இந்த காலத்தில் எங்களால் பெயர் வாங்க முடியலையே, எங்களுக்கான அங்கீகாரம் இல்லையே என்று வருத்தப்படுகிறார் அனுஷ்கா.

லிங்கா மகிழ்ச்சி

லிங்கா மகிழ்ச்சி

'லிங்கா' படத்தின் வெற்றி அனுஷ்காவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 2014ல் சூப்பர் ஸ்டாருடன் நடித்த அனுஷ்காவிற்காவிற்கு 2015ம் சிறப்பான ஆண்டுதானாம்.

அனுஷ்கா ஆண்டு

அனுஷ்கா ஆண்டு

தெலுங்கில் ‘பாகுபாலி', ‘ருத்ரமாதேவி', தமிழில் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்' என வரிசையாக படங்கள் நிற்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் அனுஷ்கா.

சீசன் நடிகைகள்

சீசன் நடிகைகள்

சீஸனில் கிடைக்கும் பழங்கள் மாதிரிதான் நடிகைகளும். ஒரு சீஸனில் ஒரு நடிகை என்றால், இன்னொரு சீஸனில் மற்றொரு நடிகை என்கிறார்.

முதலிடம் யாருக்கு

முதலிடம் யாருக்கு

என்னைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்கிறேன். முதல் இடம் குறித்த ஆசையெல்லாம் இல்லை என்றும் கூறுகிறார் அனுஷ்கா.

பழைய நடிகைகள்

பழைய நடிகைகள்

அந்த காலத்தில் எந்த தொழில் நுட்பமும் இல்லை என்றாலும், சாவித்ரி, வாணிஸ்ரீ, ஜெயசுதா, ஜெயப்பிரதா போன்ற பழைய நடிகைகளை இன்றைக்கு உள்ள சிறுவயது பசங்ககூட அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

அடையாளம் தெரியலையே

அடையாளம் தெரியலையே

டிவி, இணையதளம், முகநூல் என இருந்தும் கூட அவர்கள்போல் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. என்னையோ இப்போதைய மற்ற நடிகைகளையோ ரசிகர்களுக்கு அவ்வளவாக அடையாளம் தெரியவில்லை.

சாவித்ரி, வாணிஸ்ரீ

சாவித்ரி, வாணிஸ்ரீ

சாவித்திரி, வாணிஸ்ரீ போல் நல்ல கேரக்டர்களில் நடித்துப் பெயரெடுக்க வேண்டும் என்பது என் ஆசை'' என கூறியுள்ளார் அனுஷ்கா.

கதையை நம்பி படம்

கதையை நம்பி படம்

அந்த காலத்தில் கதையை நம்பி படம் எடுத்தனர். இந்தக்காலத்தில் கவர்ச்சியான சதைதானே ஹீரோயின்களை ஹிட் ஆக மாற்றுகிறது என்பதை அனுஷ்கா உணராதவர் இல்லை. ஆனாலும் அனுஷ்காவிற்கு கதையம்சமான சாவித்ரி, வாணிஸ்ரீ போல ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படுகிறார். கவலைப்படாதீங்க அனுஷ்கா... உங்க அருந்ததியை அடிச்சிக்க யாராலையும் முடியாது.

English summary
Actress Anushka has revealed recently that she wants to be like yesteryear actresses Vanishree and Savithri in a recent interview in Hyderabad .
Please Wait while comments are loading...