இப்படி ஒரு பொண்டாட்டி தான் வேணும்.. பிரபல நடிகையின் போட்டோக்களைப் பார்த்து உருகும் ரசிகர்கள்!

சென்னை : கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடிகை ஸ்ரீதிவ்யா நடித்த எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாததால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

மலையாளத்தைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

மேக்கப் இல்லாத பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வந்த இவர் இப்பொழுது சேலையில் கொள்ளை அழகில் இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு பொண்டாட்டி தான் எங்களுக்கு வேணும் என அடம் பிடிக்கின்றனர்.

மளமளவென குவிந்தது

மளமளவென குவிந்தது

தமிழ்,தெலுங்கு,மலையாளம் என தென்னிந்தியாவில் கலக்கி வரும் நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவிற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தி பல கோடி ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தமிழில் மளமளவென குவிந்தது.

திரைப்படங்கள் வெளியாகவில்லை

திரைப்படங்கள் வெளியாகவில்லை

தெலுங்கில் ஏற்கனவே இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வர, சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக எந்த ஒரு திரைப்படமும் ஸ்ரீதிவ்யாவுக்கு வெளியாகவில்லை. இருப்பினும் இவரின் ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கூட குறையாமல் இருக்க அவர்களுக்காக அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

மேக்கப் இல்லாமல்

மேக்கப் இல்லாமல்

குறிப்பாக மேக்கப் இல்லாத புகைப்படங்களை நடிகைகள் பலரும் சோஷியல் மீடியாக்களில் பகிர்வதை விரும்பாத நிலையில் ஸ்ரீதிவ்யாவின் மேக்கப் இல்லாத நேச்சுரல் பியூட்டி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்ததோடு இணையதளத்தில் தொடர்ந்து வைரலானது.

இப்படி ஒரு பொண்டாட்டி

இப்படி ஒரு பொண்டாட்டி

அதர்வாவுடன் இணைந்து ஒத்தைக்கு ஒத்த படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா அதை தொடர்ந்து இப்பொழுது மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார்.பிருத்விராஜ் நடிக்கும் ஜனகனமன மற்றும் தமிழில் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படம் உள்ளிட்டவைகளில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் சாதாரணமாகவே கொள்ளை அழகில் இருக்கும் ஸ்ரீ திவ்யா, இப்போது ஆரஞ்சு கலர் சேலையில் அடக்க ஒடுக்கமாக அவர் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இன்றும் சிங்கிள் பசங்களாக சுற்றிக்கொண்டிருக்கும் 90 கிட்ஸ் இப்படி ஒரு பொண்ணு தான் பொண்டாட்டியா வேண்டும் என அடம் பிடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X