கடவுளோட பிளான் என்னன்னு நமக்கு தெரியாது.. ஆனால்? அதுல்யா போட்ட அட்டகாசமான ட்வீட்!
சென்னை: கடவுளோட பிளான் என்னன்னு நமக்கு தெரியாது என நடிகை அதுல்யா போட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Recommended Video
ஞாயிற்றுக் கிழமை ஆனாலே தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே நடிகை அதுல்யா ரவியின் பொழுது போக்காக இருக்கிறது.
பியானோ வாசித்தபடியும், தனது செல்ல நாய்க்குட்டியை மடியில் வைத்தபடியும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை நடிகை அதுல்யா ஷேர் செய்துள்ளார்.

செம போர்
கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக ஷூட்டிங் ஏதும் இல்லாமல், வீட்டிலேயே பல நடிகைகளும் முடங்கிக் கிடக்கின்றனர். எப்போதுமே பிசியாக இருந்து விட்டு, இப்போது, ஒரு வேலையும் செய்யாமல் வீட்டில் இருப்பது என்பது அனைவருக்கும் போர் அடிக்கத் துவங்கி இருக்கிறது. நடிகை அதுல்யா ரவியையும் இந்த லாக்டவுன் கடுப்பேற்றி வருகிறது.

ஞாயிற்றுக் கிழமை தரிசனம்
தினமும் புகைப்படங்களை பதிவிட்டு தொல்லை செய்யும் பிரபலங்களை போல அல்லாமல், வாரத்திற்கு ஒரு முறை, அதுவும் ஞாயிற்றுக் கிழமை ஆனால், தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக தரிசனம் கொடுத்து வருகிறார் நடிகை அதுல்யா ரவி. அழகுப் புயலான அவரது புகைப்படங்களை இணையத்தில் அதிகளவில் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

கடவுள் பிளான்
இந்நிலையில், நம்ம யாருக்கும் கடவுளின் பிளான் என்னன்னு தெரியாது. ஆனால், எப்படி இருந்தாலும் கடவுளின் பிளான் தான் இறுதியில் ஜெயிக்கும் என்பது மட்டும் உறுதி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேக்கப் அணியாமல், நீல நிறத்தில் பூ போட்ட டாப்ஸ் அணிந்தபடி செம அழகாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

இதுதான் பைத்தியம்
மீரா மிதுன், யாஷிகா ஆனந்த், சாக்ஷி அகர்வால் மற்றும் அதுல்யா ரவி என யார் புகைப்படங்கள் பதிவிட்டாலும், அதனை கண்டு ரசிக்கவும், கிண்டல் செய்து கலாய்க்கவும் ஒரு கூட்டம் எப்போதுமே ஆன்லைனில் வலம் வருவது உண்டு. அதுல்யா ரவியின் இந்த கடவுள் பிளான் ட்வீட்டை பார்த்த இந்த நெட்டிசன் இது தான் இப்போ பைத்தியம் என கோமாளி மீம் போட்டு கலாய்த்துள்ளார்.

ரொம்ப க்யூட்
கோவை பெண்ணான நடிகை அதுல்யா ரவிக்கு இயல்பாகவே கடவுள் பக்தி ஜாஸ்தி. கடந்த ஜனவரி மாதம் தை பூசத்திற்கு வாழ்த்து சொல்லி, முருகன் கோயிலில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் அதுல்யாவின் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வைரலானது. அந்த புகைப்படத்தை பதிவிட்ட இந்த ரசிகர் ரொம்ப க்யூட்டா இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளார்.

மியூசிக் டைரக்டர் அதுல்யா
நடிகை அதுல்யா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தில் ரொம்ப உன்னிப்பாக கவனித்து கீ போர்டு வாசிக்கும் படியாக போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மியூசிக் டைரக்டர் அதுல்யா என்றும், வடிவேலுவின் ரியாக்ஷனை வைத்து மீம் போட்டும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











