Don't Miss!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நமீதா.. காணாமல் போன ஒரு காட்டாறு...!
சில பேரின் முகம் கூட மனதில் பதியாமல் மறைந்து போய் விடும். சிலரை வாழ்நாளின் கடைசி நொடி வரை மறக்க முடியாது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நமீதா....
தமிழ் சினிமாவை கலக்கிய வெகு சில நடிகைகளில் இவருக்கும் தனி இடம் உண்டு.
கவர்ச்சி மட்டுமே இவரது பலம் என்று சொல்ல முடியாது. அதையும் தாண்டி அவரது முகம், அதன் வசீகரம்.. அதுவும் கூடத்தான் நமீதாவை மக்கள் மனதில் படு வேகமாக டேரா போட வைத்தது.
நமீதாவை தமிழ் ரசிகர்கள் தற்போது நிறையவே மிஸ் செய்கிறார்கள்.. அந்த கவர்ச்சி காட்டாறு குறித்த ஒரு சின்ன பிளாஷ்பேக் !
சூரத்தின் அழகியாக 98ல்..
நடிகையாவதற்கு முன்பே சூரத்தின் அழகியாக, மிஸ் சூரத்தாக தேர்வானவர் நமீதா. இது நடந்தது 1998ல்.
ஜஸ்ட் மிஸ் ஆன மிஸ் இந்தியா
மிஸ் இந்தியாப் போட்டியிலும் 2001ம் ஆண்டில் கலந்து கொண்டார் நமீதா. ஆனாலும் பட்டம் என்னவோ இவரிடம் வரவில்லை.
ஐஸ் கிரீம் விளம்பரத்தில் ஐஸ் மலை
அருண் ஐஸ்கிரீம் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் நமீதா.. தெரியுமா.. பெரிய ஹிட் விளம்பரமாம் அது அப்போது. அதேபோல மாணிக்சந்த் குத்கா, ஹிமானி கிரீம் ஆகியவற்றிலும் இவர் நடித்தார்.
தெலுங்கு மூலம் வந்த சொந்தம்
தெலுங்குப் படத்தின் மூலம் தான் நடிகையானார் நமீதா. அவர் நடித்த முதல் தெலுங்குப் படம் சொந்தம்.
2004 முதல் தமிழில்
2004ம் ஆண்டு ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து தமிழுக்கு வந்தார் நமீதா. ஒன்று ஏய்.. இன்னொன்று எங்கள் அண்ணா.
2006ல் இந்திக்கும் போனார்
2006ம் ஆண்டு இந்தியிலும் நடித்து அறிமுகமானார் நமீதா. ஆனால் சேவையை தொடரவில்லை.
கடத்தலிலிருந்து தப்பினார்
2010ம் ஆண்டு இவரை திருச்சி விமான நிலையத்திலிருந்து ஒரு தீவிர ரசிகர் கடத்த முயன்றதாக செய்தி வெளியாகி டென்ஷனை ஏற்படுத்தியது. ஆனால் பத்திரமாக தப்பினார் நமீதா.
ஆறடி புயலே...
தமிழ் சினிமாவில் உயரமான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த பெருமைக்குரியவர் நமீதா - விஜயகாந்த், சுந்தர். சி போன்ற சிலரைத் தவிர. சத்யராஜ், சரத்குமார் என இந்த வரிசை நீளும்.
அப்பா -மகனுடன்
அதேபோல சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து, அப்பா, மகனுடன் ஜோடி போட்ட நடிகைகள் வரிசையில் இணைந்தவர்.
பில்லாவில் புதுக் கவர்ச்சி
அஜீத்தின் பில்லாவில் புதுவிதமான கவர்ச்சியுடன் கலக்கியவர் நமீதா.
அழகிய தமிழ் மகளாக விஜய்யுடன்
அதேபோல விஜய்யுடன் அழகிய தமிழ் மகனில் சின்னதாக ஒரு டூயட் பாடி விட்டுப் போனார்.
காணாமல் போனவர்கள் பட்டியலில்
இப்போது நமீதாவை சுத்தமாக தமிழில் பார்க்க முடியவில்லை. கவர்ச்சி களேபர நாயகிகளில் ஒருவராக இருந்தாலும் கூட அத்தனை பேரின் மனதையும் வசீகரித்தவர் நமீதா.
மீண்டும் பூங்காற்று திரும்புமா....ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள் நமீதாவின் மச்சான்ஸ்.!