மகள்களுக்காக பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடினேன்..: ஸ்ரீதேவி
மும்பை: சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார் நம்ம '16 வயதினிலே' மயிலு, ஸ்ரீதேவி.
அழகிய இரு மகள்கள், அன்பான கணவர் என பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்ட ஸ்ரீதேவி, கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'இங்கிலீஷ், விங்கிலீஷ்' படத்தின் மூலம் மீண்டும் திரை உலகில் அடி எடுத்து வைத்தார்.
சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பிரபு தேவாவுடன் நடனமாடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் ஸ்ரீதேவி. தன் மகள்களின் விருப்பத்திற்காகவே அந்த நடன அரங்கேற்றம் என தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி. மேலும், அது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது...

எனக்கு வசதிப்படாது...
நான் பொதுவாக விருது வழங்கும் விழாக்களில் நடனமாடுவது கிடையாது. எனக்கு அது சௌகர்யமான ஒன்றாக இருக்காது.

சின்ன மகளின் ஆர்வம்...
சமீபத்தில் பிரபுதேவாவுடன் நடனமாடியது கூட என் மகள்களின் கட்டாயத்தால் தான். அதிலும் எனது இளைய மகள் நான் நடனமாடுவது குறித்து அதிக ஆர்வமாக இருந்தாள்.

ஆடலாம் பாய்ச்... சின்னதா ஒரு டான்ஸ்...
நானும் ‘அதென்ன பிரமாதம். ஆடினால் போயிற்று' என பிரபு தேவாவுடன் நடனம் ஆடினேன்.

அப்போ குழந்தைகள்...
நான் இதுபோன்று மேடைகளில் நடனமாடுவதை பார்ப்பது இது தான் அவர்களுக்கு முதல் முறை. இதற்கு முன் நான் இது போன்று மேடைகளில் நடனமாடிய போது அவர்கள் மிகவும் சிறிய குழந்தைகள்' எனத் தெரிவித்துள்ளார்.

கணவர் அமைவதெல்லாம்....
மேலும், தன் கணவர் போனி பற்றி கூறும் போது, ‘ போனிஜி போன்ற கணவர் அமைய நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என நெகிழ்ந்து கூறியுள்ளார் ஸ்ரீதேவி.


Click it and Unblock the Notifications











