»   »  இதோ இவரைத்தான் "முத்தழகு" கட்டிக்கப் போறாராம்!

இதோ இவரைத்தான் "முத்தழகு" கட்டிக்கப் போறாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஒரு வழியாக பிரியாமணி கழுத்தை நீட்டத் தயாராகி விட்டார். அடுத்த வருடம் அவருக்குத் திருமணம் நடக்கப் போகிறது. இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள பிரியாமணி இது காதல் மற்றும் அரேஞ்ச்ட் மேரேஜ் என்றும் சிரித்தபடி கூறுகிறார்.

பிரியா மணியை மணக்கப் போகும் அந்த காதலர் பெயர் முஸ்தபா ராஜ். இவருடன் சிறிது காலத்திற்கு முன்பு காதலில் விழுந்த பிரியா மணி, யாருக்கும் அது தெரிந்து விடாதபடி ரகசியமாக வைத்திருந்தார்.

இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மமதம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து தற்போது திருமணச் செய்தியும் வந்து சேர்ந்து விட்டது.

பிசினஸ் மேக்னெட்டாமே!

பிசினஸ் மேக்னெட்டாமே!

பிரியாமணி மணக்கப் போகும் இந்த முஸ்தபா ராஜ், ஒரு தொழிலதிபராம். சமீபத்தில் கூட பிரியாமணி அளித்த ஒரு பேட்டியில் நான் திரைத்துறையைச் சேர்ந்தவரை மணக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். முஸ்தபாவை மனதில் வைத்துத்தான் இப்படிப் பேசினார் போல.

சில காலக் காதல்

சில காலக் காதல்

முஸ்தபாவும், பிரியாவும் சில காலமாகவே காதலித்து வருகின்றனர். இந்த காதலுக்கு ஆரம்பத்திலிருந்தே இரு வீட்டிலும் எதிர்ப்பு இல்லை என்கிறார்கள். இதுவே இவர்களது காதல் சீக்கிரமே கல்யாணத்தில் முடிய முக்கியக் காரணமாம்.

சினிமாவுக்கு சம்பந்தமே இல்லை

சினிமாவுக்கு சம்பந்தமே இல்லை

முஸ்தபாவுக்கும், சினிமாவுக்கும் சம்பந்தமே கிடையாதும். அவர் உண்டு, அவரது பிசினஸ் உண்டு என்றுதான் இருப்பாராம். முற்றிலும் சினிமா பின்னணி இல்லாத குடும்பமாம் முஸ்தபா குடும்பம்.

முதலில் வேறு வதந்தி

முதலில் வேறு வதந்தி

முன்னதாக மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா என்பவருடன் பிரியாவை இணைத்து செய்திகள் வெளியாகின. ஆனால் அது வதந்தி என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

ரகசிய பயணங்கள்

ரகசிய பயணங்கள்

முஸ்தபாவைக் காதலித்து வந்ததை படு கமுக்கமாக வைத்திருந்த பிரியா மணி, அவருடன் சேர்ந்து பல இடங்களுக்கு சத்தமில்லாமல் போய் வந்துள்ளாராம். அதுதொடர்பான படங்கள் இப்போது கிடைத்துள்ளன.

முஸ்தபா குறித்து வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பிரியா மணியே சொன்னால்தான் உண்டு!

English summary
National Award winning actress, Priyamani is all set to get married next year. She has officially confirmed the news that she is planning to marry next year and it will be a love cum arranged marriage. A close friend of hers revealed that Priyamani has been dating Mustafa Raj, a business magnet, for quite some time and she is going to get married to him soon.
Please Wait while comments are loading...