சமீராரெட்டிக்கு திருமணம்: காதலரை மணக்கிறார்

By Mayura Akilan

மும்பை: நடிகை சமீரா ரெட்டிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான நிச்சயதார்த்தாம் நடைபெற்றுள்ளது. அவர் தனது 2 வருட காதலரை மணக்க உள்ளார்.

சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜீத்துடன் அசல், வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி.

மோட்டார் பைக் நிறுவன அதிபர் அக்ஷய் வர்தேவுடன் கடந்த 2 வருடங்களுக்கு முன் சமீராவுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு காதலாக மாறி இப்போது திருமணத்தில் வந்து முடிந்துள்ளது.

சமீராவின் காதல்

சமீராவின் காதல்

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் பிஸியாக நடித்து வந்த சமீரா ரெட்டி தனது காதலை ஒருபோதும் வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து வந்தார். தற்போது அவரது காதல் அம்பலத்துக்கு வந்துள்ளது.

திருமண நிச்சயம்

திருமண நிச்சயம்

கடந்த வாரம் சமீரா அக்ஷய் திருமண நிச்சயதார்த்தம் பாந்தராவில் உள்ள சமீராவின் வீட்டில் ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

பக்கத்து வீட்டில்

பக்கத்து வீட்டில்

நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூறும்போது, சமீராவும், அக்ஷயும் ஒரே தெருவில் அருகருகே வசித்து வந்தனர். இது சமீராவுக்கு நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்தது. இருவரும் காதலர்களான பிறகே இந்த விவரம் தெரியவந்ததாம்

ஏப்ரலில் திருமணம்

ஏப்ரலில் திருமணம்

அக்ஷயுடன் நிச்சயதார்த்தம் நடந்ததா? என்று சமீராவிடம் கேட்டபோது, ஆமாம் எங்களது நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க உள்ளது என்றார். -

காதல் ஜோடிகள்

காதல் ஜோடிகள்

கடந்த இரு வருடங்களாகவே இருவரும் பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றித்திரிந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் மோட்டார் சைக்களில் பல சமயங்களில் ஜோடிபோட்டு சுற்றியுள்ளனராம்.

அப்போது தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி சமீரா ஹெல்மெட் அணிந்து காதலனுடன் வலம் வந்துள்ளார் சமீரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X