அமெரிக்கா டாக்டருடன் திருமணமா?: தமன்னா விளக்கம்
Recommended Video

சென்னை: தான் டாக்டர் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக வெளியான தகவலை அறிந்து தமன்னா எரிச்சல் அடைந்துள்ளார்.
தமன்னா தற்போது சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் வேலை பார்க்கும் டாக்டரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின.
அவரது சினிமா கெரியர் டல்லடிப்பதால் திருமணம் செய்து செட்டிலாக விரும்புவதாக கூறப்பட்டது.

தமன்னா
தன்னுடைய திருமண வதந்தி குறித்து அறிந்த தமன்னா கோபம் அடைந்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக அவரின் பெயர் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியுடன் அடிபட்டது. அதன் பிறகு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை தமன்னா காதலிப்பதாக சில காலம் கிசுகிசுக்கப்பட்டது.

விளக்கம்
ஒரு நாள் நடிகர், மறுநாள் கிரிக்கெட் வீரர், தற்போது டாக்டர். இந்த வதந்திகளை எல்லாம் பார்த்தால் நான் கணவரை தேடும் பணியில் இருப்பதாக தெரிகிறது. காதல் பிடிக்கும் என்றாலும் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஆதாரமில்லாத செய்திகளை ஏற்க முடியாது என்று தமன்னா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

சந்தோஷம்
நான் தற்போது சிங்கிளாக, சந்தோஷமாக உள்ளேன். என் பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை தேடவில்லை. நான் தற்போது ரொமான்ஸ் செய்யும் ஒரே விஷயம் என் சினிமாவை தான். நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் நிலையில் இது போன்ற வதந்திகள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை என தமன்னா நொந்துள்ளார்.

அறிவிப்பு
நான் திருமணம் செய்தால் அதை நிச்சயம் அனைவருக்கும் சொல்லிவிட்டுத் தான் செய்வேன். நான் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்வதாக இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இந்த வதந்திகள் எல்லாம் யாரோ ஒருவருடைய கற்பனையே என்று அனைத்து தேவையில்லாத பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமன்னா.


Click it and Unblock the Notifications











