சபாஷ், சரியான போட்டி: 2 நடிகைகளின் மோதலை வேடிக்கை பார்க்கும் திரையுலகம்
Recommended Video

மும்பை: திருமண விஷயத்தில் தீபிகா, ப்ரியங்கா இடையே இருக்கும் போட்டியை பார்த்து பாலிவுட்காரர்கள் அமைதியாக உள்ளனர்.
பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனேவுக்கும், ப்ரியங்கோ சோப்ராவுக்கும் இடையே தொழிலில் போட்டி உள்ளது. ஆனால் அதை அவர்கள் வெளியில் காட்டிக் கொள்வது இல்லை.
அவர்கள் தோழிகள் போன்று நடந்து கொண்டாலும் உண்மை என்னவென்பது திரையுலகினருக்கு நன்கு தெரியும்.

போட்டி
தொழிலில் மட்டும் அல்ல திருமண விஷயத்திலும் தீபிகா, ப்ரியங்கா சோப்ரா இடையே போட்டி நிலவுகிறது. தீபிகாவின் திருமணம் இத்தாலியில் பிரமாண்டமாக நடந்தபோதிலும் அனைவரின் கவனமும் அடுத்த மாதம் திருமணம் செய்யும் ப்ரியங்கா மீது தான் உள்ளது. தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ப்ரியங்கா.

ப்ரியங்கா
தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியான கையோடு ப்ரியங்காவின் திருமணம் நடக்கும் ஜோத்பூர் அரண்மனையின் புகைப்படங்கள் வெளியாகின. உடனே ரசிகர்கள் தீபிகாவை விட்டுவிட்டு ப்ரியங்கா பற்றி பேசத் துவங்கிவிட்டனர். இருவரின் திருமண தேதிகளும் 2 வார இடைவேளையில் இருப்பது கூட போட்டிக்கு தான் என்று கூறப்படுகிறது.

வெயில்
ப்ரியங்கா சோப்ரா தான் வெயிலில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டதே ரசிகர்களுக்கு பிடித்துப் போய்விட்டது. தீபிகாவின் திருமணம் நடந்த நேரத்திலும் புதுப்புது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்தார் ப்ரியங்கா. திருமண போட்டியில் ப்ரியங்கா தான் வெற்றி பெற்றுள்ளார்.

பாலிவுட்
நகைகள் விஷயத்திலும் ப்ரியங்கா தீபிகாவை தோற்கடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுலர் பார்ட்டிக்கே ப்ரியங்கா ரூ. 9.5 கோடி மதிப்புள்ள நகைகள் அணிந்திருந்தார். திருமணத்திற்கு நிச்சயம் அதை விட அதிகம் மதிப்புள்ள நகைகளை அணிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபிகா, ப்ரியங்கா இடையே நடக்கும் போட்டியை பாலிவுட் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.


Click it and Unblock the Notifications











