“கலர் கலரான” காஸ்ட்யூமில் கலக்கும் டிம்பிள் கபாடியா
மும்பை:பாலிவுட்டின் முன்னாள் கனவுக்கன்னியான டிம்பிள் கபாடியா மீதான கிரேஸ் இன்னும் கூட அப்படியேதான் உள்ளது.
டிம்பிள் கபாடியா அடிக்கடி இந்திப் படத்தில் தலைகாட்டுகிறார். வயதானாலும் முன்னாள் கனவுக்கன்னியான இவரது மீதான க்ரேஸ் இன்னும் பாலிவுட்டுக்குப் போகவில்லை.
அதனால்தானோ என்னவோ பாலிவுட் அவரை மீண்டும் நடிக்க அழைத்திருக்கிறது.

”வெல்கம் பேக்” டிம்பிள்:
டிம்பிள் கபாடியா தற்போது நடித்து வரும் படம் "வெல்கம் பேக்". இந்தப் படத்தில் அவருக்கு பணக்கார பெண்மணி வேடம்.

அலங்காரப் பிரியை:
உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கும் அலங்கார ப்ரியை. காஸ்ட்யூம் விஷயத்தில் ரசனையானவராக நடிக்கும் அவரின் இந்த கதாபாத்திரத்தை பாரிஸ் ஹில்டனை மனதில் வைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.

பாரிஸ் ஹில்டன் ஜெராக்ஸ்:
பாரிஸ் ஹில்டன் உபயோகிக்கும் காஸ்ட்யூமைப் போலவே டிம்பிளுக்கும் வடிவமைத்திருக்கிறார்கள்.

ஜொலிக்கும் பேரழகி:
டிம்பிள் கபாடியா சும்மாவே அழகு, இந்தப் படத்தில் பேரழகாக ஜொலிப்பார் என பட யூனிட் சொல்கிறது.

எதிரான விமர்சனம்:
மோசமாக உடையணிந்ததற்காக பலமுறை பத்திரிகைகளால் விமர்சிக்கப்பட்டவர் பாரிஸ் ஹில்டன் என்பது குறிப்பிடத்தக்க விசயமாகும்.

அம்பு தாக்குமா:
ஆனால் டிம்பிளுக்கு அப்படி ஒரு விமர்சன அம்பு எதுவும் வந்து தாக்காது என்று நம்புவோமாக.


Click it and Unblock the Notifications











