புற்று நோயாளிகளுக்காக ஆண்ட்ரியா என்ன செய்தார் தெரியுமா? ... குவியும் பாராட்டுக்கள்!
சென்னை: பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி, தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை ஆண்ட்ரியா.
ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் தன்னை நிரூபித்து உள்ளார் ஆண்ட்ரியா.சமீபத்தில் புஷ்பா படத்தில் அவர் பாடிய பாடல் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது .
தற்போது இவர் புற்று நோயாளிகளுக்காக முடி தானம் செய்துள்ளார். இவர் செய்த இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பல திறமைகள்
பன்முகத்திறமைசாலியான நடிகை ஆண்ட்ரியா, ஹீரோயினாக மட்டுமல்லாமல் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பை யதார்த்தமாக வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் என்று தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த நடிகை ஆண்ட்ரியா, துப்பறிவாளன் படத்தில் நடிகர் வினய்யுடன் சேர்ந்து நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

வித்யாசமான கதாபாத்திரம்
தரமணி, வடச்சென்னை போன்ற படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். யோகா செய்வது உடற்பயிற்சி செய்வது என்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இவை அனைத்தையும் தவறாமல் செய்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.

சமூக அக்கறை
தன்னுடைய கேரியரை தவிர, சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. சில சமயம் உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டு அதன் முக்கியத்துவத்தை கூறி வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. தான் ஸ்லிம்மாக இருக்கும் காரணத்தையும் அவர் ஃபாலோ செய்யும் டயட் ப்ளானயும் தன் ரசிகர்களுக்காக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வரும் நடிகை ஆண்ட்ரியா, இப்பொழுது செய்துள்ள காரியத்தால் ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.

அழகில் கவனம்
நடிகைகள் என்றாலே தங்களது அழகில் அதிக கவனம் செலுத்துவார்கள். அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களில் நடித்து வரும் பல நடிகைகளுக்கு மத்தியில், நடிகை ஆண்ட்ரியா விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து வந்தது தற்போது பாராட்டுகளை குவித்து வருகின்றது.
புற்று நோயாளிகளுக்காக நடிகை ஆண்ட்ரியா தனது முடியை தியாகம் செய்துள்ளார். பொதுவாகவே புற்றுநோயாளிகளுக்கு மொட்டை அடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். அதனால் பல புற்றுநோயாளிகள் மனம் உடைந்து போவதும் உண்டு. அவர்களை பாதுகாக்கும் விதத்தில் தனது முடியில் இருந்து ஒரு சிறிய பகுதியை வெட்டி எடுத்து புற்று நோயாளிகளுக்காக கொடுக்கப் போவதாக சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்..

முக்கியத்துவம்
விளம்பரத்தில் முடியை டொனேட் செய்வதில் உள்ள முக்கியத்துவத்தையும், மற்றவர்கள் ஏன் இதை செய்ய ஆர்வம் காட்ட வேண்டும் என்ற விளக்கத்தையும் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. முழு முடியை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் முடியில் இருந்து ஒரு சிறிய பகுதியை கொடுத்தாலே போதும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ஆண்ட்ரியா. இவ்வாறு பொது சேவையில் ஈடுபட்டு வருவது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர் செய்து வரும் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தால் இவருக்கு பல பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.world cancer day சமீபத்தில் பல மருத்துவர்களால் பல விழிப்புணர்வு வீடியோஸ் இணையத்தில் வந்ததை நாம் பார்த்தோம் . ஆண்ட்ரியாவுடைய இந்த பங்களிப்பு இன்னும் பலரை ஊக்குவிக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications











