தொப்புள் மேட்டரால் மார்க்கெட் ஆடிப் போய்விடுமோ: பயத்தில் நஸ்ரியா
சென்னை: நய்யாண்டி படத்தின் தொப்புள் விவகாரத்தில் தான் செய்தவற்றால் மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம் நஸ்ரியா.
தனுஷுடன் நஸ்ரியா ஜோடி சேர்ந்து நடித்த நய்யாண்டி படத்தின் ஒரு காட்சியில் தனக்கு தெரியாமல் டூப் போட்டு எடுத்து தொப்புளை மிகவும் ஆபாசமாக காட்டியதாக நஸ்ரியா இயக்குனர் சற்குணம் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து திடீர் என்று ஒரு நாள் தாங்கள் சமாதானமாகிவிட்டதாக நஸ்ரியா பத்திரிக்கையாளர்களை அழைத்து தெரிவித்தார்.

எரிச்சலில் கோடம்பாக்கம்
தொப்புள் விவகாரத்தில் நஸ்ரியா செய்த அலும்பலை பார்த்து கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் அவர் மீது எரிச்சலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நோ சொன்ன ஜீவா
நஸ்ரியாவை தனது படத்தில் நடிக்க வைக்க காத்திருந்த ஜீவா தொப்புள் விவகாரத்திற்கு பிறகு அவர் வேண்டவே வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்.

பயம்
தொப்புள் பிரச்சனையால் தனது மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம் நஸ்ரியா.

ஆதரவு திரட்டுகிறார்
தனது அபிமானத்திற்குரிய சில ஹீரோக்கள், இயக்குனர்களை சந்தித்து தன் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறி வருகிறாராம் நஸ்ரியா. ஒரு படத்தில் போனால் போகுது என்று விட்டால் அதன் பிறகு படத்துக்குப் படம் பிரச்சனையாகிவிடும். அதனால் தான் ஆரம்பத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன் என்கிறாராம் நஸ்ரியா.


Click it and Unblock the Notifications











