அது ஏன் அந்த செக்ஸ் காட்சியை என் பெயரில் மட்டும் ஷேர் செய்கிறீர்கள்?: ராதிகா
Recommended Video
மும்பை: அது ஏன் கசிந்த படுக்கையறை காட்சி என் பெயரில் ஷேர் செய்யப்படுகிறது என்று ராதிகா ஆப்தே கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே தி வெட்டிங் கெஸ்ட் என்கிற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அவரும் ஸ்லம்டாக் மில்லியனர் படம் புகழ் தேவ் பட்டேலும் சேர்ந்து படுக்கையறை காட்சியில் நடித்துள்ளனர்.
அந்த காட்சி மட்டும் எப்படியோ கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது. இந்நிலையில் இது குறித்து ராதிகா ஆப்தே பேட்டி அளித்துள்ளார்.

படுக்கை காட்சி
தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நிறைய அழகான காட்சிகள் உள்ளன. ஆனால் ஒரு குறிப்பிட்ட செக்ஸ் காட்சி கசிந்து வைரலாகியுள்ளது என்றால் அது நம் சமூகத்தின் மோசமான மனநிலையை காட்டுகிறது. கசிந்த காட்சியில் நானும் இருக்கிறேன், தேவ் பட்டேலும் உள்ளார். அப்படி இருக்கும்போது ராதிகா ஆப்தே செக்ஸ் காட்சி என்று ஏன் அதை ஷேர் செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

வீடியோ கசிவு
தேவ் பட்டேல் செக்ஸ் காட்சி என்று அந்த காட்சியை ஷேர் செய்ய வேண்டியது தானே? அது ஏன் நடிகர் பெயரை விட்டுவிடுகிறார்கள்? என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். ராதிகா ஆப்தே படுக்கையறை காட்சியில் நடித்துள்ளது இது முதல் முறை அல்ல. மேலும் அந்த படுக்கையறை காட்சிகள் வைரலாவதும் இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ராதிகா ஆப்தே
முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராதிகா ஆப்தே, பாலிவுட் நடிகர் ஆதில் ஹுசைன் நடித்த படுக்கையறை காட்சிகள் கசிந்தன. மேலும் ராதிகா ஆப்தேவின் தனிப்பட்ட புகைப்படங்களும் கசிந்து வைரலாகின. ஒரு திருமணமான பெண் இப்படியா படுக்கையறை காட்சியில் நடிப்பது என்று விமர்சனம் எழுந்தபோதிலும் அதை ராதிகா கண்டுகொள்ளவில்லை.

புகார்
படுக்கையறை காட்சிகளில் நடிப்பது குறித்து ராதிகா ஆப்தே முன்பு கூறியதாவது, அந்த காட்சிகளில் நடிக்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் உலக சினிமாவை பார்த்து வளர்ந்தவள். நான் நிறைய பயணம் செய்துள்ளேன். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேடையில் கலைஞர்கள் நிர்வாணமாக நடித்துள்ளதை பார்த்திருக்கிறேன். என்னை மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











