ஐயையோ... நடிகை அனுஷ்கா கஷ்டப்பட்டு நடித்து வாங்கிய சொத்துக்கள்... கடைசியில இப்படி ஆயிடுச்சாமே?
ஐதராபாத்: நடிகை அனுஷ்கா கஷ்டப்பட்டு வாங்கிய சொத்துக்கள் இப்படி ஆகிவிட்டது என்று தெலுங்கு சினிமாவில் ஒரு டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவருகிறார். இடையில் அவர் உடல் எடை கூடிவிட, அதைக் குறைக்கும் முயற்சியில் இருந்தார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றுவந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவர் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.
Recommended Video

விரைவில் திருமணம்
இதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகச் செய்திகள் வந்தன. நடிகர் பிரபாஸை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை இருவருமே மறுத்தனர். அவர் என் நண்பர் என்று அனுஷ்காவும், என் தோழி என்று பிரபாஸும் தெரிவித்தனர். இருந்தாலும் இவர்கள் பற்றிய கிசு கிசு இன்னும் ஓயந்த பாடில்லை.

சொத்துக்கள்
இந்நிலையில் அனுஷ்கா கஷ்டப்பட்டு நடித்து வாங்கிய சொத்துக்கள் இப்படியாகிவிட்டது என்று தெலுங்கு இன்டஸ்ட்ரியில் டாக் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 10 வருடங்களாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் அனுஷ்கா. அவர் அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பார் என்று எல்லோரும் நினைத்திருப்பார்கள். அவரும் அப்படித்தான் இருந்தாராம்.

பிரமாண்டமான வீடு
அதாவது ஐதராபாத்தில் நான்கு பெட் ரூம் பிளாட் ஒன்றை வைத்திருந்தார் நடிகை அனுஷ்கா. பிரமாண்டமான இந்த வீட்டை வாங்கிய கொஞ்ச காலத்திலேயே தெலங்கானா பிரச்னை தலைதூக்கியது. இந்தப் பிரச்னை காரணமாக சொத்துக்கள் விலை இறங்கிவிடும் என்று யாரோ கிளப்பி விட, அதை ரூ.5 கோடிக்கு விற்றுவிட்டார் அனுஷ்கா. அதன் அப்போதைய மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் என்கிறார்கள்.

ரியல் எஸ்டேட்
இதே போல ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த அனுஷ்கா, விசாகப்பட்டினத்தில் ஏராளமான நிலங்களை வாங்கியிருந்தார். 2014 ஆம் ஆண்டு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அமராவதியை தலைநகராக்கும் முயற்சியில் இருந்தார். இதனால் விசாகப்பட்டினத்தில் நிலங்களின் விலை ஏறாது என்று முடிவு செய்த அனுஷ்கா, வெறுத்துப் போனார்.

அவசர முடிவு
இதையடுத்து விசாகப்பட்டினத்தில் வாங்கிய நிலங்களில் சுமார் 80 சதவிகிதத்தை குறைந்த விலைக்கு விற்றுவிட்டார். ஆனால், இப்போது விசாகப்பட்டினத்தில் நிலங்களின் கன்னா பின்னாவென்று ஏறியிருக்கிறது. இதை நினைத்து இப்போது அவர் வருத்தப்படுவதாகக் கூறுகிறார்கள். அவசரத்தில் அனுஷ்கா எடுக்கிற முடிவால் இந்தப் பிரச்னை என்கிறது டோலிவுட்.


Click it and Unblock the Notifications











