என்னாச்சு ஓவியா, அந்த அளவுக்கு உங்களுக்கு என்ன கஷ்டம்?
Recommended Video
சென்னை: ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓவியா அளித்த பதில் தான் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.
ஓவியா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எப்பொழுதும் போன்று வெளிப்படையாக பதில் அளித்தார். தங்களுக்கு பதில் அளிக்கவில்லை என்று சில ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.
ட்விட்டரில் அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கான பதில்களும் இதோ.
சி.எஸ்.கே.
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் அணிகளில் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் ஓவியாவின் ஆதரவாம். விசில் போடு.
விடுகதையா?
உங்கள் வாழ்க்கையை பாடல் மூலம் விவரித்தால் அது எது என்று ஒருவர் கேட்க விடுகதையா இந்த வாழ்க்கை என்று பதில் அளித்துள்ளார் ஓவியா.
ஓவியா
உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு கோஹ்லி என்று பதில் அளித்துள்ளார் ஓவியா.
வீரபாண்டி கோட்டையிலே
ஓவியாவுக்கு பிடித்த தமிழ் பாடல் வீரபாண்டி கோட்டையிலேவாம். அவர் டேஸ்டே வித்தியாசமாக இருக்கிறதே என்கிறார்கள் நெட்டிசன்கள்.
மெச்சூரிட்டி
மெச்சூரிட்டி பற்றி கேட்டவருக்கு இந்த கேள்விகுளுக்கு எல்லாம் பதில் அளிக்கும் பொறுமை தான் ப்ரோ என்று தெரிவித்துள்ளார் ஓவியா.


Click it and Unblock the Notifications











