»   »  'தல' படத்தில் அக்ஷரா ஹாஸன் என்னவாகத் தான் நடிக்கிறாரு?

'தல' படத்தில் அக்ஷரா ஹாஸன் என்னவாகத் தான் நடிக்கிறாரு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தல 57' படத்தில் அக்ஷரா ஹாஸன் அஜீத்தின் பார்ட்னராக நடிக்கிறாராம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு பெல்கிரேடில் நடந்து வருகிறது. அஜீத்துக்கு மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள்.

What is Akshara's role in Thala 57?

இந்நிலையில் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா அஜீத்துக்கு ஜோடி என்றார்கள். பின்னர் அவர் அஜீத்தின் தங்கையாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. உண்மையில் அக்ஷரா அஜீத்தின் தங்கை இல்லையாம்.

இன்டர்போல் அதிகாரியான அஜீத் தமிழகத்தில் நடந்த கொலை பற்றி விசாரணை நடத்துகிறார். அவரின் பார்ட்னராக இருந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவி செய்கிறாராம் அக்ஷரா.

படத்தில் அக்ஷராவுக்கு ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாம். இது தான் அக்ஷரா நடிக்கும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Akshara Haasan will be seen in an action oriented role in Thala 57. She is interpol officer Ajith's partner in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil