»   »  மெடிக்கல் மிராக்கிள்: எதிரி தீபிகா படுகோனேவை பாராட்டி பேசிய கரீனா கபூர்

மெடிக்கல் மிராக்கிள்: எதிரி தீபிகா படுகோனேவை பாராட்டி பேசிய கரீனா கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது கணவர் சயிப் அலி கானுக்கு ஏற்ற ரீல் ஜோடி தீபிகா படுகோனே என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் தான் சல்மான் கானுடன் சேர்ந்து நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் பாக்ஸ் ஆபீஸை அடித்து துவைத்து காயப் போட்டுள்ளதால் குஷியாக உள்ளார். கரீனாவுக்கு திருமணம் ஆன பிறகும் மார்க்கெட் சற்றும் பாதிக்காமல் அப்படியே உள்ளது.

படங்கள் மட்டும் அல்ல விளம்பரப் படங்களிலும் நடித்து கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

சல்மான்

சல்மான்

பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் கத்ரீனா கைஃபை நடிக்க வைக்க இயக்குனர் கபீர் கான் நினைத்தார். ஆனால் கரீனாவை நடிக்க வைக்குமாறு கூறியதே சல்மான் கான் தான்.

தீபிகா

தீபிகா

கரீனா கபூருக்கும், தீபிகா படுகோனேவுக்கும் ஆகவே ஆகாது. தீபிகா ஒரு காலத்தில் கரீனாவின் கசின் ரன்பிர் கபூரை காதலித்தார். அப்போதில் இருந்தே கபூர் குடும்பத்தில் பலருக்கு தீபிகாவை பிடிக்காமல் போனது. காரணம் அவர் ஓவராக நடந்து கொண்டாராம்.

கரீனா

கரீனா

உங்கள் கணவர் சயிப் அலி கானுக்கு ஏற்ற ரீல் ஜோடி யார் என்று கரீனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ தனக்கு பிடிக்காத தீபிகாவின் பெயரை சட்டென்று தெரிவித்தது பலரையும் வியக்க வைத்தது. சயிப் அலி கானும், தீபிகாவும் ஏற்கனவே சேர்ந்து படங்களில் நடித்துள்ளனர்.

கத்ரீனா

கத்ரீனா

அண்மை காலமாக கரீனா கபூர் ரன்பிர் கபூரின் காதலியான நடிகை கத்ரீனா கைஃபை புகழ்ந்து பேசி வருகிறார். கத்ரீனாவுக்கும் கரீனாவை போன்றே தீபிகா படுகோனேவை கண்டாலே பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kareena Kapoor told that Deepika Padukone is the best reel pair for her hubby Saif Ali Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil