நடிகைகள் எதை மறைப்பார்களோ அதை வெளிப்படையாக சொல்லும் காஜல்
Recommended Video

சென்னை: நடிகைகள் எதை பற்றி பேச மாட்டார்களோ அதை பற்றி தைரியமாக பேசியுள்ளார் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வால் தற்போது டோலிவுட்டில் ரொம்ப பிசியாகிவிட்டார். காஜல் நடிக்க வந்து பல ஆண்டுகளாகிவிட்டாலும் இன்னும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சீனியர்கள் மட்டும் அல்ல இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமா குறித்து காஜல் கூறியிருப்பதாவது,

வயது
எந்த துறையை சேர்ந்த பெண்ணிடம் போய் உங்கள் வயது என்ன என்று கேட்டால் சொல்லத் தயங்குவார்கள். அதிலும் குறிப்பாக நடிகைகள் வயதை பற்றி பேசவே மாட்டார்கள். நான் அப்படி கிடையாது. என் நிஜ வயதை மறைக்க விரும்பவில்லை.

அகர்வால்
வயதை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. படங்களில் தங்களை மிகவும் வயது குறைந்தவர்கள் போன்று காட்ட நடிகைகள் கஷ்டப்படுகிறார்கள். என்னிடம் வயதை கேட்டால் நிஜத்தை விட கூடுதலாக 10 ஆண்டை சேர்த்து சொல்லவும் நான் தயார்.

அனுபவம்
சினிமாவில் நான் 10 ஆண்டுகளாக இருந்தாலும் நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. வேறு எந்த துறையிலும் இந்த அளவுக்கு அனுபவம் கிடைக்காது. எனக்கு 30 ஆண்டு கால அனுபவம் 10 ஆண்டுகளில் கிடைத்துள்ளது. அதனால் வயது பற்றி கவலை இல்லை.

தீர்வு
எந்த பிரச்சனை வந்தாலும் பதட்டப்படாமல் நிதானமாக யோசித்து தீர்வு காணும் பக்குவம் வந்துவிட்டது. யாராவது பிரச்சனை என்று வந்தாலும் அவர்களுக்கும் அறிவுரை வழங்கி தீர்வு காணும் நிலைக்கு வந்துவிட்டேன். நான் ரொம்ப மெச்சூராகிவிட்டேன் என்கிறார் காஜல் அகர்வால்.


Click it and Unblock the Notifications











