லிங்கா நாயகி சோனாக்ஷிக்கும், நடிகர் ஷாஹித் கபூருக்கும் இடையே காதல்?
மும்பை: நடிகர் ஷாஹித் கபூருக்கும், நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கும் இடையே காதல் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.
பிரபுதேவா இயக்கத்தில் ஆர்....ராஜ்குமார் படத்தில் ஷாஹித் கபூரும், சோனாக்ஷி சின்ஹாவும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகிவிட்டது என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சோனாக்ஷி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடிக்க வந்துவிட்டார். ஒரு நாள் படிப்பிடிப்பு இல்லாததால் மும்பைக்கு விமானம் மூலம் சென்றார் சோனாக்ஷி.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு சோனா ஷாஹித் கபூருடன் ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் தனித் தனியாக கிளம்பி சென்றுள்ளனர். இரவு 12.45 மணிக்கு சோனாக்ஷி மும்பை ஜுஹுவில் உள்ள ஷாஹிதின் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் வந்த பிறகு சில நண்பர்களும் அங்கு வந்துள்ளனர்.
ஷாஹித்தின் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த புகைப்படக்காரர்களை அவர் அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
ம்ம்ம்ம் என்னமோ நடக்குது.


Click it and Unblock the Notifications












