காதலர் தினத்துக்கு என்னங்கம்மா உங்க திட்டம்? சிம்பு ஹீரோயினிடம் சிக்கலாகக் கேள்வி கேட்ட ரசிகர்கள்

By

சென்னை: நடிகை சனா கானின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

தமிழில் ஜனநாதன் இயக்கிய ஈ படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தவர் சனாகான். பின்னர் இந்தி படங்களில் நடித்தார்.

தமிழில் அடுத்து சிம்புவின் சிலம்பாட்டம், பரத்தின் தம்பிக்கு இந்த ஊரு, ராதா மோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை படங்களில் நடித்தார்.

பிகினி உடை

பிகினி உடை

விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துவந்த அவர், இப்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். சமீப காலமாக முன்னணி நடிகைகள் வரை பலரும் சமூக வலைத்தளங்களில் பிகினி உடையில் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

சனா கான்

சனா கான்

அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த நடிகைகளை போல, தனது புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை சனா கான் . ஆனால் அவர் அதிக கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது இல்லை என்றாலும் அதையும் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

கோரிக்கை

கோரிக்கை

இந்நிலையில் அவர் கடற்கரை ஒன்றில், மணலில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் பதிவிட்டிருந்தார். அழகான அந்தப் புகைப்படத்துக்கு ஏராளமான ரசிகர்கள், விருப்பங்களைத் தெரிவித்திருந்தனர். கூடவே கோரிக்கை ஒன்றையும் வைத்திருந்தனர். தயவு செய்து பிகினி உடையில் வாங்களேன் என்பதுதான் அது.

ஏராளமான கவிதைகள்

ஏராளமான கவிதைகள்

ஆனால், அதை சனாகான் கண்டுகொள்ளவில்லை. தற்போது கொஞ்சம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு போட்டோவுக்கு, காகிதத்தில் வடித்துவிட முடியாத ஏராளமான கவிதைகள் உங்களுக்குள் இருக்கின்றன என்று கேப்ஷன் கொடுத்துள் ளார் சனா கான். அவரது இந்த புகைப்படங்களையும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ள னர். இந்தப் புகைப்படத்தில் நீங்கள் அப்படியே ஓவியம் போல இருக்கிறீர்கள் என்று சிலர் கூறியுள்ளனர்.

காதலர் தினத்துக்கு

காதலர் தினத்துக்கு

ஒரு ரசிகர், 'இந்த போட்டோவை விட சிலம்பாட்டம் படத்துல நீங்க அவ்வளவு அழகு, தெரியுமா?' என்று கேட்டுள்ளார். இன்னொருவர் காதலர் தினத்துக்கு என்னங்கம்மா உங்க திட்டம்? என்று கேட்டுள்ளார். முழு உடையில நீங்க எவ்வளவு அழகு, பிறகு ஏன் இப்படி அரைகுறை டிரெஸ்சை போட்டுட்டு அலையறீங்க? என்று ஒருவர் கோபமாகக் கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X