ரசிகர்களுக்கு முகத்தை காட்டாமல் ஏர்போர்ட்டில் இருந்து ஓடிய பிரீத்தி ஜிந்தா
பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா பிராக்கில் நடந்த ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை வந்தார். விமான நிலையத்தில் அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். மேலும் செய்தியாளர்களும் அங்கு கூடியிருந்தனர். வழக்கமாக சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ரசிகர்களைப் பார்த்து கை ஆட்டிவி்ட்டுப் போகும் அவர் இம்முறை யாருக்குமே முகத்தை காட்டவில்லை.
தனது கையாலும், முடியாலும் முகத்தை மறைத்தபடியே அங்கிருந்து வெளியேறினார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பிரீத்திக்கு என்னாச்சு, இப்படி முகத்தை மறைத்துக் கொண்டே போய்விட்டார் என்று முணுமுணுத்தனர். அவரது தாடை வீங்கியிருந்ததை அங்கிருந்தவர்கள் பார்ததுவிட்டனர். அது கீழே விழுந்து அடிபட்டதா அல்லது ஏதாவது லடாயா என்று தெரியவில்லை.
அவர் முகத்தை மறைத்தாலும் புகைப்படக்காரர்கள் அதையும் விடாமல் போட்டோ எடுத்துத் தள்ளினர். அந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரீத்திக்கு என்னாச்சு என்பது தான் அனைவரின் கேள்வியும்.


Click it and Unblock the Notifications












