என் முதல் கணவரிடம் அனுபவித்த சித்ரவதைகள் இருக்கே... அதை விவரிக்கவே முடியாது.. ஹீரோயின் பகீர் புகார்

By

கொச்சி: என் முதல் கணவரிடம் நான் அனுபவித்த சித்திரவதைகள் கொடுமையானது என்று நடிகை மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

தமிழில், உன்னைச் சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உட்பட சில படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன்.

இவர், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக, தன்மத்ரா என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானாலும் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இப்போது சில படங்களில் நடித்துவருகிறார்.

திருமணம், விவாகரத்து

திருமணம், விவாகரத்து

இவர், பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலை காதலித்து 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு திடீரென விவாகரத்துப் பெற்றார். இதையடுத்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். இதுவும் நீடிக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அரிஹா என்ற மகன் உள்ளார்.

மானேஜர்தான்

மானேஜர்தான்

இந்நிலையில், மலையாள சினிமாவில், தான் நல்ல நிலைக்கு வராததற்கு தனது மானேஜர்தான் காரணம் என்று கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் மறக்க நினைக்கிற விஷயங்களில் திருமணமும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

பெண்களைத்தான்

பெண்களைத்தான்

அவர் கூறும்போது, என் திருமணம் பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை. ஆனால், ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல முடியும். ஒரு திருமணம் முறிந்து, விவாகரத்து வரை சென்றுவிட்டால் பெண்களைத்தான் சமூகம் குற்றம் சுமத்துகிறது. ஆனால் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை.

சித்திரவதை

சித்திரவதை

நான் என் முதல் திருமணத்தின்போது, அந்த கணவரிடம் அனுபவித்த கொடுமைகள் அதிகம்.
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல சித்திரவதைகளை அனுபவித்தேன். அது விவரிக்க முடியாதது. அந்த நேரத்தில், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பை நாடினேன். 2012 ஆம் வருடம் மறுமணம் செய்துகொண்டேன். அந்தத் திருமணமும் மகிழ்ச்சியாக அமையவில்லை. அவருடனும் மனரீதியாகப் பழக முடியவில்லை. இதனால் அந்த திருமணமும் தொடரவில்லை. விவகாரத்தில் முடிந்தது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X