ஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்

By Siva

சென்னை: அமலா பால் கட்டிப்பிடிக்க சென்றபோது இயக்குனர் வெட்கப்பட்டு பின்னால் நகர்ந்த சம்பவம் நடந்துள்ளது.

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் கலந்து கொண்ட சக்சஸ் மீட் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் அமலா பால் பேசியதாவது,

நல்லவர்

நல்லவர்

இயக்குனர் ராம் ரொம்ப நல்லவர். இந்த ராட்சசன் படத்திற்காக கஷ்டப்பட்டோம். படப்பிடிப்பு முடிந்தபோது அப்பாடா முடிந்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சியில் நான் ராமை ஹக் பண்ண போனேன். ஆனால் அவர் பின்னாடி போய்விட்டார். ராம் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர். அவருக்கு விரைவில் அவரின் வாழ்க்கைத்துணை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இந்த ராட்சசன் படத்தை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. நல்ல கதை இருந்தால் படத்தை வெற்றி அடையச் செய்துவிடுவார்கள் என்பதை ரசிகர்கள் புரிய வைத்துவிட்டார்கள். மீ டூ பற்றி முதல் ஆளாக ட்வீட் செய்ததே நான் தான்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

கடந்த பிப்ரவரி மாதம் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டபோது நான் மீ டூ என்று ட்வீட் செய்தேன். அந்த நேரம் தான் சர்வதேச அளவில் மீ டூ இயக்கம் தீவிரம் அடைந்தது. பாலியல் தொல்லைகள் சினிமா துறையில் மட்டும் அல்ல பல துறைகளில் உள்ளது. மீ டூ ஒரு நல்ல விஷயம். இந்த இயக்கம் இன்னும் தீவிரமடையும். அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

சினிமா

சினிமா

ராட்சசன் எனக்கு 35வது படம். நான் படங்களில் நடிப்பதற்காகவே பிறந்தேன் என்று சொல்வேன். அதை நான் நம்புகிறேன். இனி நான் பிரேக் எடுக்கவே முடியாது. என் வாழ்நாள் முழுவதும் சினிமா துறையில் ஒரு அங்கமாக இருப்பேன். நான் 18 வயதில் நடிக்க வந்தேன். தமிழ் திரையுலகம் தான் எனக்கு அம்மா.

நடிகை

நடிகை

ஒரே இரவில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்று நினைத்து வந்தேன். 8 ஆண்டுகள் கழித்து தற்போது எனக்கு ஸ்டார் ஆக வேண்டாம். நல்ல நடிகையாக வேண்டும். படங்களில் ரசித்து ரசித்து நடிக்க வேண்டும். பல திறமையான இயக்குனர்களுடன் நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X